குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு கடும் எச்சரிக்கை..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டுநர்களின் ஆல்கஹால் அளவை உடனே கண்டறியக்கூடிய புதிய கையடக்க ப்ரீத் கருவியை (HBEA) சோதனைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால், சந்தேக நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மறுபடி சோதனை செய்ய வேண்டிய அவசியம் நீங்கும்.
செப்டம்பர் 5 முதல் நடந்த சோதனையில், 43 வயது ஆண் மற்றும் 48 வயது பெண், அதிக ஆல்கஹால் அளவு காரணமாக கைது செய்யப்பட்டனர். 2024-இல் 960 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 2025-இல் இது 1,023 ஆக அதிகரித்து உள்ளது.
போக்குவரத்து போலீசார் தெரிவித்ததாவது, “குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் – இது உங்கள் உயிருக்கும் உரிமைக்கும் ஆபத்து!”என்று கூறினார்.
சட்டப்படி, 100 மில்லிலிட்டர் சுவாசத்தில் 35 மைக்ரோகிராமுக்கும், 100 மில்லிலிட்டர் இரத்தத்தில் 80 மில்லிகிராமுக்கும் மேல் ஆல்கஹால் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் சாலை போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 67(1) இன் படி, குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டால், குற்றவாளிக்கு $2,000 முதல் $10,000 வரை அபராதம், 12 மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.மேலும் அவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.