புக்கிட் பாத்தோக்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!! 60 பேரின் நிலை என்ன..??

புக்கிட் பாத்தோக்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!! 60 பேரின் நிலை என்ன..??

சிங்கப்பூர்: புக்கிட் பாத்தோக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

நேற்று (மார்ச் 12) காலை 8:20 மணிக்கு புக்கெட் பாத்தோக் வெஸ்ட் அவன்யூ 8 பிளாக் 465A இல் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. பின்னர் தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கிருந்த கிட்டத்தட்ட 60 குடியிருப்பாளர்களை பாதுகாப்பாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் வெளியேற்றியுள்ளனர்.

அப்படி இருந்தும் தீ விபத்து ஏற்பட்ட போது வெளிவந்த அந்த புகையை சுவாசித்ததால் ஒருவருக்கு பேருக்கு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஒருவருக்கு மார்பு வலியும் ஏற்பட்டது.

சிகிச்சைக்காக ஒருவரை சிங்கப்பூர் போது மருத்துவமனைக்கும் மற்றொரு நபரை இங் பாங் பொது மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டனர். மேலும் தீ விபத்திற்கான காரணத்தை சிவில் பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK