ஆச்சரியப்படும் தகவல்: படித்ததும் மறையும் மின்னஞ்சல்..!!

ஆச்சரியப்படும் தகவல்: படித்ததும் மறையும் மின்னஞ்சல்..!!

வாட்ஸ் அப்பில் அனுப்பும் தகவல்களை ஒருமுறை மட்டுமே படிக்கும் வசதி இருப்பது போல ஜிமெயிலிலும் பலருக்கும் தெரியாத ஒரு ரகசிய அம்சம் உள்ளது. அதுதான் கான்ஃபிடன்ஷியல் மோடு(Confidential Mode).

இந்த வசதியை பயன்படுத்தி அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு காலாவதி நேரத்தை நிர்ணயிக்க முடியும்.

இமெயிலை பெறுபவர்கள் குறிப்பிட்ட காலம் முடிந்ததும் அந்த மின்னஞ்சலை மீண்டும் திறந்து பார்க்க முடியாது.

அதுமட்டுமல்லாமல் அனுப்பியவர் விரும்பினால் எந்த நேரத்திலும் அந்த மின்னஞ்சலை ரத்து செய்ய முடியும். பாதுகாப்பை மேலும் அதிகரிப்பதற்காக OTP அடிப்படையிலான வசதியும் வழங்கப்படுகிறது.

இதனால் பெறுநரின் மொபைலுக்கு வரும் OTP யை உள்ளீடு செய்த பிறகு மின்னஞ்சலை படிக்க முடியும்.

வங்கி தகவல்கள், கடவுச்சொற்கள், ரகசிய ஆவணங்கள் போன்ற முக்கிய விவரங்களை பகிர வேண்டிய நேரங்களில் ஜிமெயிலின் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.