சிங்கப்பூர்: யிஷூனில் நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் மூவர் காயமடைந்தனர்.
காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து அக்டோபர் 16ஆம் தேதி மாலை சுமார் 6.45 மணியளவில் யிஷுன் அவென்யூ 2 பகுதியில் மூன்று கார்களும் ஒரு லாரியும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விபத்து நடந்ததாக காவல்துறை தெரிவித்தது.
இதில் 78 வயது ஆண் கார் ஓட்டுநர், அவரது 69 வயது பெண் பயணி மற்றும் 46 வயது பெண் கார் ஓட்டுநர் ஆகிய மூவரும் காயமடைந்த நிலையில் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தனர்.
29 வயது பெண் ஓட்டுநர் ஒருவர் விசாரணைக்கு உதவி செய்து வருவதாக போலீசார் கூறினர்.