பரிசுப் பொருளை ஆவலுடன் திறந்த நபருக்கு காத்திருந்த பெரிய ட்விஸ்ட்..!!!

பரிசுப் பொருளை ஆவலுடன் திறந்த நபருக்கு காத்திருந்த பெரிய ட்விஸ்ட்..!!!

சீனாவின் குவாங்டொங் மாநிலத்தைச் சேர்ந்த ஜியாங் ஜியாங் என்பவருக்கு ஆண்டிறுதி ஒன்று கூடல் விழா பேரதிர்ச்சியில் முடிந்தது. நிறுவனத்தின் ஆண்டிறுதி ஒன்றுகூடலில் அவருக்கு உயர்தர கைப்பேசி பரிசாக கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு பல நிறுவனங்கள் ஊழியர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். அதன்படி நடந்த போட்டியில் ஜியாங் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவரிடம் “iPhone 17 Pro Max” என குறிப்பிடப்பட்ட பெட்டியை கடை பையுடன் வழங்கினர். அதற்கான விலையை காட்டும் ரசீதும் சேர்த்து கொடுக்கப்பட்டது.

பரிசு பெற்ற மகிழ்ச்சியில், அதை வீட்டில் திறந்து மனைவிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் ஆவலுடன் வீட்டிற்கு சென்றார். பரிசு வழங்கும் தருணத்தில் கைப்பேசியின் விலையும் மேடையில் அறிவிக்கப்பட்டதால், அவர் நம்பிக்கையுடன் இருந்தார்.

ஆனால் வீட்டில் பெட்டியை திறந்தபோது அவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.அதற்குள் இரண்டு சாக்லெட்கள், மூன்று மிட்டாய்கள் மற்றும் சில தரைக்கற்கள் மட்டுமே இருந்தன. உண்மையான கைப்பேசி எதுவும் இல்லை.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் எனக்கு கைப்பேசி தேவையில்லை.ஆனால் தன்னை ஏமாற்றியவர்கள் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜியாங் தெரிவித்துள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK