அதிர்ச்சி…!!!சிங்கப்பூரில் 11 வயது சிறுவன் காணாமல் போன பரபரப்பு..!!

அதிர்ச்சி...!!!சிங்கப்பூரில் 11 வயது சிறுவன் காணாமல் போன பரபரப்பு..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மரைன் டெரஸ் பகுதியில் வசிக்கும், ஆட்டிசம் மற்றும் ADHD பாதிப்புடன் வாழும் 11 வயது சிறுவன் ஹேரில், கடந்த 24 மணி நேரமாக காணவில்லை.

குடும்பத்தினர் கூறுகையில், சிறுவன் அரிதாகவே தனியாக வெளியே செல்லக் கூடியவர் என்றும், எப்போதும் யாரோ ஒருவர் அவனுடன் இருப்பார் என்றும் கூறியுள்ளனர். ஆனால் நேற்று (29.08.25) காலை 11 மணியளவில், அந்தச் சிறுவன் திடீரென வீட்டிலிருந்து தனியாக வெளியேறியுள்ளான்.

சிசிடிவி காட்சி படி, சிறுவன் சாம்பல் நிற ஷார்ட்ஸ் மட்டும் அணிந்திருந்தான்.சட்டை, காலணி, பணப்பை எதுவும் இல்லாமல் வெளியேறியதாக தெரிகிறது.


அவன் காணாமல் போனதை அறிந்த குடும்பத்தினர், இரவு முழுவதும் விழித்திருந்து தனியாக தேடினர். மேலும் சமூக ஊடகங்கள் மற்றும் காவல்துறையின் உதவியையும் நாடியுள்ளனர்.

கடைசியாக சிறுவன் மரைன் கிரசென்ட் பிளாக் 29 அருகே, காலை 11:05 மணியளவில் காணப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஹேரிலை பார்த்தவர்கள் உடனடியாக குடும்பத்தினரை 80256570 என்ற எண்ணில் அல்லது காவல்துறையின் ஹாட்லைன் 1800-255-0000 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் தகவல்களை www.police.gov.sg/i-witness மூலமும் வழங்கலாம்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan