ஜாலியாக குளிக்கச் சென்ற பெண்..!!! பின்பு நடந்தது என்ன..???

ஜாலியாக குளிக்கச் சென்ற பெண்..!!! பின்பு நடந்தது என்ன..???

சிங்கப்பூர்: புக்கிட் தீமாவின் Symphony Heights கூட்டுரிமை வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கிய 40 வயதுப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் குறித்து புதன்கிழமை (24.09.25) தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தனர்.

புகார் கிடைத்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

நீச்சல் குளத்தில் மூழ்கியிருந்த பெண் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

பெண்ணின் அடையாளம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை.

முதற்கட்ட விசாரணையில் சந்தேகத்துக்குரிய மரணம் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும், மரணத்திற்கான துல்லியமான காரணத்தை உறுதி செய்ய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம், அப்பகுதி குடியிருப்பாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK