ரயில் தண்டவாளத்தில் விழுந்த பயணி..!! பாதுகாப்பாக மீட்கப்பட்டாரா..??
சிங்கப்பூரில் புக்கிட் பஞ்சாங் எல் ஆர் டி யில் கடந்த மாதம் அக்டோபர் 27, 2025 ஆம் தேதி இரவு 11:35 மணி அளவில் குடிபோதையில் இருந்த ஒரு பயணி தவறுதலாக ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்த ஊழியர்கள் இந்த அசாதாரண சம்பவத்தை கண்டதும் விரைந்து சென்று அவசர நிறுத்த பொத்தானை சரியான நேரத்தில் இயக்கி நிலையத்தின் இழுவை சக்தியை விரைவாக துண்டித்துள்ளனர்.
தகவல் கிடைத்த பிறகு உடனடியாக விரைந்து வந்த குடிமை தற்காப்பு படை ஒருவரை டான் டோக் செக் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது.
இந்த சம்பவத்தை SMRT மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும் SMRT தலைமை நிர்வாக அதிகாரியான லாம் சியூ காய் தகவல் தெரிவித்துள்ளார்.