இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ…!!! நெட்டிசன்கள் கண்டனம்..!!

இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ...!!! நெட்டிசன்கள் கண்டனம்..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஓடும் பொதுப் பேருந்தில் ஒருவர் வெளிப்படையாக இ-சிகரெட்டை புகைத்ததாக கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட அந்த வீடியோவில், பேருந்து ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் நின்றபடி அந்த நபர் மின்-சிகரெட்டை பயன்படுத்துவது போல் காணப்படுகிறது. இந்த சம்பவம் ITE மேற்கிலிருந்து பயனீர் பகுதிக்கு சென்ற பேருந்து எண் 974-ல் நடந்ததாக பதிவிட்டவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த நேரம் குறிப்பிடப்படாத நிலையில், குறுகிய நேரத்திலேயே அந்த காணொளி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இணையவாசிகள் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

சிலர் கருத்துப் பகுதியில் காவல் துறையையும், சுகாதார அறிவியல் ஆணையத்தையும் டேக் செய்தனர்.

மேலும் நேற்றைய (31.01..26)நிலவரப்படி இந்த காணொளி ஒரு லட்சத்து 60 ஆயிரம் பார்வையாளர்களை பெற்றது.

சிங்கப்பூரின் புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ், இ-சிகரெட்டுகளை வைத்திருப்பது, பயன்படுத்துவது அல்லது வாங்குவது சட்டவிரோதமாகும்.

இதற்கு அதிகபட்சமாக S$2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், சமூக ஊடகங்களில் இ-சிகரெட் பயன்பாட்டை ஊக்குவிக்கும் உள்ளடக்கம் பகிரப்பட்டால், அதற்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.முதல் முறை குற்றவாளிகளுக்கு $10,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மீண்டும் மீண்டும் குற்றம் செய்தால் இருமடங்கு தண்டனையை அனுபவிக்க நேரிடலாம்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK