செல்லப்பிராணிகளுக்கு நேர்ந்த சோகம்..!! வைரலாகும் காணொளி..!!

செல்லப்பிராணிகளுக்கு நேர்ந்த சோகம்..!! வைரலாகும் காணொளி..!!

இரண்டு பிரெஞ்சு புல்டாக் ரக செல்லப்பிராணி நாய்களான க்ரியான் மற்றும் கோபு ஆகியவற்றை உரிமையாளர் செல்லப்பிராணி பராமரிப்பு மையமான அட்வென்சர் டெயில்ஸ் என்ற இடத்தில் விட்டு சென்றுள்ளார்.

இது குறித்த தேசிய பூங்கா வாரியத்தின் விலங்கு மற்றும் கால்நடை சேவைகள்(AVS) செல்லப்பிராணிகளின் முறையற்ற பராமரிப்பு செயல்கள் காரணமா? என்பது குறித்த விசாரணையை தற்போது தொடங்கியுள்ளது.

இது குறித்த காணொளி பதிவானது சமூக ஊடகத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் rescuewithlovesg என்று கணக்கில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவில் மார்ச் 6 ஆம் தேதி மாலையில் இந்த சோக சம்பவம் நடந்ததாக தெரிய வருகிறது.

நாய் பராமரிப்பு மையத்தில் இருந்தால் நாய்களுக்கும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏர் கண்டிஷனங் இல்லாத காரில் பூட்டப்பட்ட நிலையில் இருந்த செல்லப்பிராணிகள் வெப்பம் அதிகரித்த காரணத்தினால் மிகவும் சோர்வாக இருப்பது தெரியவந்தது.

இது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது ஓட்டுநர் அலட்சியமாக செய்த செயல் தற்போது உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு மாறியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?
லாரி ஓட்டுநர் அலட்சியமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கதவை மூடிய நிலையில் வைத்துள்ளார். காற்று போகாத காரணத்தினால் செல்லப்பிராணிகள் மூச்சு விட சிரமம் ஏற்பட்டு மயங்கும் நிலைக்குச் சென்றது.

அப்போது கிரையன் கோமா நிலைக்கு செல்லும் நிலையில் இருந்ததாகவும், கோபு லாரியிலிருந்து குதிக்க முயற்சித்து காற்று சுவாசிக்க வாயை மேலும் அகலமாக திறந்து மூச்சு விட சிரமப்பட்டு இருக்கின்றது தெரியவந்தது.

மாலை நேரத்தில் செல்லப்பிராணிகளை வீட்டிற்கு அழைத்து வர வண்டும் என்றாலும் ஓட்டுனரிடம் நாயின் உரிமையாளர் தகவல் கொடுத்ததை அடுத்து ஓட்டுனர் விரைந்து வந்த செல்லப்பிராணிகளை உரிமையாளரிடம் சேர்த்தார்.

ஆனால் இரண்டும் அவதார நிலையில் இருந்ததாக உணர்ந்த செல்லப்பிராணியின் உரிமையாளர் பரிசோதனைக்கு உடனே கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கால்நடை மருத்துவர் கூறியதாவது:
இரண்டு நாய்களும் வெப்பத்தின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதையும் கூறினார். அதில் கிரான் உயிர் பிழைக்கும் தருவாயில் கூட இல்லை என்பதையும் அப்படியே மயக்க நிலையில் இருந்து மீண்டும் வந்தாலும் உள் உறுப்புகள் சேதமடைந்திருக்கும் என்றும் கால்நடை மருத்துவர் தெரிவித்தார்.
மேலும் கோபு என்ற செல்லப்பிராணியில் உடல்நிலை ஓரளவு சீராக இருக்கின்றது என்றும் கூறினார்.

இதைஅடுத்து செல்ல பிராணியின் உரிமையாளர் இரண்டு நாய்களையும் வீட்டிற்கு அழைத்து வர கிரியோன் பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்த காவல்துறையிடம் புகார் கொடுத்ததை அடுத்த விசாரணையின் போது அனைத்து விதமான தவறுகளும் தெரியவந்தது. இதனால் கோபுவின் மருத்துவச் செலவுகளை செல்லப்பிராணியின் பராமரிப்பு மையத்தின் தலைவரை ஏற்றுக்கொண்டார்.

இது குறித்த விசாரணையை தேசிய பூங்கா வாரியத்தின் விலங்கு மற்றும் கால்நடை விவகார பிரிவின் மூத்த இயக்குனரான குவோ ருய்ஜிங் மேற்கொண்டதாக தெரியவந்தது. இது குறித்த இயக்குனர் கூறியது, விலங்கு பராமரிப்பு மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் விலங்குகளை நன்றாக பராமரிக்க வேண்டிய கடமையை கொண்டுள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் விலங்குகள் மற்றும் பறவைகள் சட்டத்தின்படி விலங்குகள் தொடர்பான வேலைகளில் பணிபுரிபவர்கள் விலங்கு நலனின் உயர்தரங்களை நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும் எனவும் விலங்குகள் தொடர்பான வணிகத்தை நடத்தும் போது அல்லது பணியில் அமர்த்தும் போதும் விலங்குகளை எந்த ஒரு துஷ் பிரயோகம் செய்ததாக கண்டறியப்பட்ட எவராக இருந்தாலும் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், $40,000 அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சோக சம்பவம் நிகழ்ந்ததையடுத்து, செல்லப்பிராணி பராமரிப்பு மையமான அட்வென்சர் டெயில்ஸ் ஆனது பாதிக்கப்பட்ட செல்லப்பிராணி உரிமையாளர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் தற்போது போக்குவரத்து நிறுவனத்தையும் மதிப்பாய்வு செய்த பைரோ லாஜிஸ்டிக் உடனான ஒத்துழைப்பை உடனடியாக முடித்துக் கொண்டதாகவும் பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறது.

மேலும் விலங்குகளை ஏற்றி செல்லும் அனைத்து வாகனங்களும் தற்போது காற்று சீரமைப்பு பொருத்தப்பட்டுள்ளது உறுதி செய்தும், விலங்கு போக்குவரத்து சேவைகளையும் மேலும் வலுப்படுத்தி உள்ளதாகவும் இதனால் விலங்குகளுக்கு காற்று சுழற்சி மற்றும் காற்றோட்டத்தின் வசதியான சூழலை வழங்க முடிகிறது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK