மெக்பர்சனில் விழுந்த மரம்..!! பாதிப்பு யாருக்கு..??

மெக்பர்சனில் விழுந்த மரம்..!! பாதிப்பு யாருக்கு..??

மரைன் பரேட் பிராட்லி ஜி ஆர் சி எம் பி டான் பெய் லிங் இன்று (பிப்ரவரி 18) காலை 10 மணி அளவில் மேக்பெர்சன் சாலையில் பெரிய மரம் விழுந்த செய்தியை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் காவல்துறையினர் மற்றும் நகர சபை ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரம் விழுந்ததால் இரு பாதைகளும் நடைபாதையும் அடைபட்டு இருந்ததை சீர்படுத்த ஏற்பாடு செய்தனர். இதில் பாதசாரிகளும் ஒழுங்குபடுத்துவதற்கு உதவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மரம் விழுந்த நேரத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் வரவில்லை என்பதால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை. மேலும் வாகனங்கள் எதுவும் சேதமடையவில்லை என தெரியவந்துள்ளது.

மரத்தை அகற்றும் நேரத்தில் பேருந்து சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விழுந்தா இந்த மரத்தை கடைசியாக சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஆய்வு செய்ததாகவும் அவ்வப்போது ஒப்பந்ததாரர் இந்த மரம் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் அதன் மதிப்பீட்டை சென் பீலிங் கூறினார்.

இருந்தாலும் மரம் விழுந்ததற்கான காரணத்தை பற்றி விசாரிக்கவும் அந்தப் பகுதியில் உள்ள மரங்களை மீண்டும் ஒருமுறை விரிவாக ஆய்வு நடத்த வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட பணியாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

சந்திர புத்தாண்டின் இரண்டாவது நாளான இன்று தங்கள் பதவிகளில் தங்கி இருந்த ஊழியர்களுக்கு சம்பவ இடத்தை விரைவாக சுத்தம் செய்ததற்காகவும் பாதசாரிகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுத்தவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

விழுந்த மரத்தை அகற்றப்பட்டதாக இன்று காலை சான் அவரது பதிவை 10: 12 மணிக்கு தெரிவித்துள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK