இந்த மாதம் 2025- இல் PCM PERMIT, MARINE PERMIT மற்றும் SHIPYARD PERMIT இல் வரவிருக்கும் வேலைவாய்ப்புகள்..!!!
இந்த மாதம் 2025- இல் PCM PERMIT, MARINE PERMIT மற்றும் SHIPYARD PERMIT இல் வரவிருக்கும் வேலைவாய்ப்புகள்..!!!
PCM PERMIT இன் நிறை, குறைகள்: ✴️Service Charge மிகக் குறைவு. ✴️ வேலையானது கடினமாக இருக்கும். ✴️சம்பளம் குறைவாக இருக்கும். ✴️ஒரு சில வேலைகளில் சம்பளம் அதிகமாக இருக்கும்.
PCM PERMIT இல் வரவிருக்கும் வேலைவாய்ப்புகள்: 1. Office boy 2. Welder 3. Electrician 4. Technician
OFFICE BOY: 🔷HR – க்கு உதவியாளராக(Assistant) இருப்பது 🔷Workers மற்றும் Office – க்கு இடையில் ஒரு தகவல் பரிமாற்றம் செய்பவராக இவ்வேலை இருக்கும். 🔷இந்த வேலையானது எளிதாக இருக்கும். 🔷சம்பளம் அதிகமாக இருக்கும்.
WELDER: 🔶 இந்த வேலைக்கு சிங்கப்பூரில் அதிக வாய்ப்புள்ளது. 🔶சம்பளம் அதிகமாக கொடுக்க வாய்ப்புள்ளது. 🔶 General worker ஆக பணிபுரிய வாய்ப்புள்ளது. 🔶 SHIPYARD PERMIT மற்றும் PCM PERMIT ஐ ஒப்பிடும்போது சம்பளம் அதிகம்.
ELECTRICIAN: 💠 இந்த வேலையானது எளிதாக இருக்கும். 💠சம்பளம் அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது.
Operator level இல் யாரேனும் SHIPYARD PERMIT மற்றும் PCM PERMIT இல் இருந்தீர்களானால் Fort lift operator மற்றும் Machine operator வேலை தெரிந்திருந்தால் சம்பளம் அதிகமாக வழங்க வாய்ப்புள்ளது.
TECHNICIAN: ✴️Mechanical வேலைகள் தெரிந்திருந்தால் technician ஆக பணியில் அமர்த்தப்படுவீர். ✴️இந்த வேலைக்கும் அதிக சம்பளம் கொடுக்க வாய்ப்புள்ளது.
இவ்வேலைகள் அனைத்தும் Interview மூலம் தேர்வு செய்யப்படும். இந்த வேலைக்கு தேர்வானவர் நிறுவனம் வழங்கும் சம்பளம் குறித்து கூறுகையில் சம்பளத்தை அதிகரித்துக் கொடுக்க வேண்டும் எனக் கூறி அதிக சம்பளம் பெறவும் வாய்ப்புள்ளது.
Technician வேலை தெரியாத நபருக்கும் இருக்கும் வேலைவாய்ப்புகள்: 🔷General Worker ஆக பணிபுரிய வாய்ப்புள்ளது. 🔷சம்பளம் குறைவாக இருக்கும். 🔷Training centre மூலம் தங்களைத் தயார் செய்து கொண்டு Pipe fitting, Pipe installation போன்ற Welder பணிகளுக்கு பயிற்சி கொடுக்கின்றனர். 🔷ஒரு சில வேலைகளுக்கு இலவசமாக பயிற்சி வழங்குகின்றனர். 🔷சில வேலைகளுக்கு பயிற்சிக் கட்டணம் 10,000 ரூபாய் செலுத்தி பயிற்சி பெற வேண்டும்.
இதுபோன்ற வேலைவாய்ப்புகளுக்குச் செல்ல விரும்புவோர் நமது இணையதளமான www.sgtamilan.com சென்று தகவலைத் தெரிந்து கொள்ளலாம்.
SHIPYARD PERMIT, PCM PERMIT வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் சம்பளம் குறைவாகவே இருக்கும். ஆனால், வேலைக்குச் சென்ற பிறகு நீங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் அதிக சம்பளம் பெற வாய்ப்புள்ளது.
அனுபவம் வாய்ந்தவராக இருந்தால் சம்பளம் அதிகமாகப் பெற முடியும்.
WORK PERMIT இல் செல்வது பற்றிய விவரம்: ✴️Skilled Test மூலம் வேலைக்குச் செல்ல இயலும். ✴️Without Skilled Test மூலமாகவும் வேலைக்குச் செல்ல முடியும். இதன் விவரங்கள் பின்வருமாறு: ✓High Levy மூலமாக மட்டுமே செல்ல முடியும். அதாவது, நிறுவனமானது Levy அதிகமாகச் செலுத்தி உங்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ✓ஒரு சில நிறுவனங்கள் ஹை லேவி மூலம் உங்களைத் தேர்வு செய்து பணியமர்த்திப் பிறகு Skilled Test மூலம் பணியில் அமர்த்த வாய்ப்புள்ளது. ஆனால், இது மிக அரிதாகவே நடக்கக்கூடியதாகும்.
1. PSA அதிக அளவில் வேலைவாய்ப்பு உள்ள field பின்வருமாறு: ♦️Driver Job ♦️Lacing Work ♦️Crane operator Work DRIVER JOB: 💠Batch licence மற்றும் Heavy licence வைத்திருத்தல் வேண்டும். 💠அதிகமாக Heavy licence வைத்துள்ளவர்களையே இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்.
LACING WORK: 💠மிகவும் கடினமான வேலையாக இருக்கும். 💠சம்பளம் போதுமானதாக வழங்கப்படும்.
CRANE OPERATOR WORK: 💠 இந்த வேலைக்கு நிறுவனத்தில் பயிற்சி வழங்கப்படும். 💠இந்த வேலை பற்றிய அனுபவம் போதுமானதாக இருத்தல் அவசியமாகும்.
இந்த மூன்று வேலைவாய்ப்புகளும் PSA இல் அதிகமாக உள்ளது. இன்னும் 2 அல்லது மூன்று மாதத்திற்குள் PSA வில் இருந்து ஆர்டர் வந்தடையும்.
PSA வின் மூலம் வேலைக்குச் செல்ல விரும்புவோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ✴️மிகவும் கண்டிப்பான முறையில் தேர்வு செய்யப்படுவீர். ✴️பெரிய வாகனங்களை ஓட்டிய அனுபவம் இருத்தல் அவசியம். ✴️சென்னையில் நேரடியாக சிங்கப்பூர் நிறுவனமானது Interview செய்து தேர்வு செய்யப்படுவீர். ✴️பயிற்சி வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். சிறந்த முறையில் பயிற்சியைக் கற்றுக்கொள்ளவில்லை எனில் பயிற்சிக்கட்டணம் திருப்பித் தரமாட்டாது. ✴️ டிராக்டர் ஓட்டத் தெரிந்திருந்தால் டிரைவிங் தேர்வில் எளிதாக தேர்வாகிவிடலாம். ✴️ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். இந்த மாதத்திற்கான PSA DRIVER வேலைவாய்ப்பு பற்றிய தகவலைத் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கைக் கிளிக் செய்யவும்.
மேற்கண்ட அனைத்து வேலைவாய்ப்புகளைப் பற்றிய தகவல்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது இணையதளமான www.sgtamilan.com டைப் செய்து சிங்கப்பூர் வேலைவாய்ப்பு செய்திகள் என்ற போர்டலில் பார்த்துப் பயனடையலாம்.