சிங்கப்பூரின் முதல் திரையரங்கம் உருமாற்றம்..!! URA அறிவிப்பு..!!

சிங்கப்பூரின் முதல் திரையரங்கம் உருமாற்றம்..!! URA அறிவிப்பு..!!

சிங்கப்பூரின் முதல் திரையரங்க நிலையமான “ஈசூன் 10” என்ற கட்டிடம் ஒட்டுமொத்தமாக உருமாற்றம் செய்யப்படுகிறது. அந்த இடத்தை வர்த்தகம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களாக மாற்று போவதாக நகரச் சீரமைப்பு ஆணையம்(URA) தெரிவித்துள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ செய்தியானது மே 8- ஆம் தேதி அன்று நகரச் சீரமைப்பு ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் அந்த கட்டிடம் இருக்கும் நிலப்பகுதியை வர்த்தக வட்டாரமாக. மாற்றப் போவதாக ஆணையம் கூறியிருந்தது. ஆனால் தற்பொழுது அதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி குடியிருப்பு வட்டாரமாக அந்த இடம் மாறும் எனவும் முதல் மாடியில் மட்டும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் URA கூறியுள்ளது.

1992 ஆம் ஆண்டு மே மாதம் அன்று திறக்கப்பட்ட இந்த கட்டிடம் ஜிவி ஈசூன் என்று அழைக்கப்படுகிறது. இது ஃபிரேசர்ஸ் பிராப்பர்டீஸ்க்கு சொந்தமானதாகும். இந்நிறுவனத்திற்கு நார்த்பாயிண்ட் சிட்டி என்ற கட்டிடமும் சொந்தமாக உள்ளது.

தங்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் அதற்கு ஏற்ப புதிய திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக CRA கூறியது. இந்த நிலையில் தற்போதைய சொத்துக்களைச் சாத்தியமுள்ள வழியில் பயன்படுத்துவது குறித்து எவ்வாறு ஆராய்வது என்பது எங்களுடைய வழக்கமென்று பிரேசர்ஸ் ப்ராப்பர்டி-இன் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் தற்போதைய வாடகைதாரர்களின் குத்தகை எப்போது முடிவடையும் என்பதற்கு ஈசூன் 10 வழக்கம்போல் செயல்படும் எனவும், புதிய மாற்றம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த கட்டிடம் ஆஸ்திரேலியக் கட்டட வடிவமைப்பளாரான ஜியோஃப் மலோன் வடிவமைப்பில் $37 மில்லியன் செலவில் கட்டப்பட்டதாகும். இந்த கட்டிடம் 4 மாடிகளைக் கொண்டது. முதல் மாடியில் சில்லறைக் கடைகள் செயல்படுகின்றன.

மேலும் 1477 இருக்கைகள் கொண்ட 10 திரையரங்குகள் அதற்குள் உள்ளன. அடித்தளத்தில் கார்பேட்டை உள்ளது. மேலும் அதில் ஆர்னால்ட்ஸ், ஃப்ரைட் சிக்கன், ஸ்ரீ முருகன் சூப்பர் மார்க்கெட், கோமளாஸ் உணவகம் உள்ளிட்டவை தற்போது செயல்பட்டு வருகின்றது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK