வைரலான வீடியோ பதிவு..!! பாராட்டிய இணையவாசிகள்..!! எதற்கு..??
சிங்கப்பூரில் பாசிர் ரிஸ்ஸில் உள்ள HDB குடியிருப்பு வளாகத்தில் இருந்த ஒரு குப்பைத் தொட்டியில் திடீரென தீ பற்றியது.
இந்த தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அங்கிருந்த வெள்ளை மலாய் உடை அணிந்த ஒருவரும், சாம்பல் நிற சட்டை மற்றும் கருப்பு கால் சட்டை அணிந்த மற்றொருவரும் சேர்ந்து முறையாக தீயணைப்பான் மற்றும் குழாய் ஆகியவற்றை பயன்படுத்தி தீ விபத்தை அணைத்தனர்.
இது குறித்த காணொளி பதிவானது இணையத்தில் வைரலாகி வந்த ஏழு மணி நேரத்திற்குள் சுமார் 200600 லைக்குகளை பெற்று பல இணையவாசிகளின் பாராட்டையும் குவித்து வருகிறது.
இந்த வீடியோ பதிவு குறித்து பல இனவாசிகள் தீயை அணைத்த இருவரையும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் குடிமை பாதுகாப்பு படை அவர்களுக்கு பரிசளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படையினருக்கு மார்ச் 22ஆம் தேதி இரவு சுமார் 8:30 மணி அளவில் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததாக கூறினர்.
இந்த விபத்தானது பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 13, பிளாக் 150 இல் உள்ள ஒரு குப்பை தொட்டியில் இருந்த பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருவதற்குள் இருவரும் தீயை அணைத்து விட்டனர். இந்த விபத்தில் எந்தவித காயமும் யாருக்கும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.