பிரதமரின் தேசிய தின உரையில் இளைஞர்கள் கவனித்தது என்ன..??

பிரதமரின் தேசிய தின உரையில் இளைஞர்கள் கவனித்தது என்ன..??

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சமீபத்திய தேசிய தின பேரணியில் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் உரை மாணவர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. மலாய், மாண்டரின் மற்றும் ஆங்கிலத்தில் அவர் வெளிப்படுத்திய மொழித் திறமையும், உரையின் தனிப்பட்ட வசீகரமும், பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேனல் 8 நிருபர்கள் நடத்திய பேட்டிகளில், மாணவர்கள் ஒருமனதாக அவரின் உரையைப் பாராட்டினர்.

மேலும் இது குறித்து 18 வயது மாணவி காய் லிஜியா கூறியதாவது, மக்களின் ஒற்றுமையை எடுத்துரைக்க பிரதமர் பாடல் வரிகளை மேற்கோள் காட்டிய விதம் மனதை கவர்ந்ததாகக் குறிப்பிட்டார்.

வேலைவாய்ப்பு பிரச்சினைகள், சிங்கப்பூர்–மலேசியா தொடர்புகள், குறிப்பாக வுட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடி விரிவாக்கம் மற்றும் விரைவு போக்குவரத்து திட்டம் ஆகியவை மாணவர்களின் கவனத்தை ஈர்த்தன. மலேசிய சகாக்கள் உடன் பணிபுரியும் மாணவர்கள், இந்த மாற்றங்கள் எல்லை தாண்டும் மக்களுக்கு பெரிய நன்மை தரும் என தெரிவித்தனர்.

மேலும் நாட்டின் முக்கிய பிரச்சினையாக இருக்கும் மின்-சிகரெட்டுகள் தொடர்பான அவரின் எச்சரிக்கை பேச்சும் சிறப்பாக இருந்தது.பிரதமர் இளைஞர்களிடம் பரவி வரும் “ஜாம்பி வேப்” பழக்கத்தை அரசாங்கம் போதைப்பொருள் பிரச்சனையாகக் கருதி கடுமையாகக் கட்டுப்படுத்தும் என்று பிரதமர் அறிவித்தார்.இது மாணவர்களிடையே அதிக விவாதத்தை ஏற்படுத்தியது.

சமூக ஊடகங்கள் வழியாக பேரணியைப் பின்தொடர்ந்த மாணவர்கள், வீடமைப்பு திட்டங்கள் மற்றும் வடக்குப் பகுதி மேம்பாடு குறித்த அறிவிப்புகளை கவனித்தனர். “இது அதிகமான மக்களை தங்க வைக்கும்” என 18 வயதான ஜாங் சென்யுவான் குறிப்பிட்டார்.

மொத்தத்தில், உரைக்கு மாணவர்கள் ஒன்பது புள்ளிகளுக்கு மேல் மதிப்பீடு அளித்தனர்.

மொழித் திறன், மக்களிடம் நெருக்கமாக பேசும் திறன் ஆகியவற்றில் பிரதமர் சிறந்தவர் என பெரும்பாலானோர் கருதினர்.

ஆனால், சிலர் நேரமின்மை மற்றும் போதிய தகவல் இல்லாமை காரணமாக இந்த ஆண்டு பேரணியை முழுமையாகப் பின்தொடர முடியவில்லை.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan