கேலாங்கில் சைரன் ஒலியால் அதிர்ந்த சாலை ..!! என்ன நடந்தது.??
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்றிரவு(16.01.26) கேலாங்கிலிருந்து மரைன் பரேட் வரை பல போக்குவரத்து போலீஸ் மோட்டார் சைக்கிள்களும் போலீஸ் கார்களும் ஒரு காரைப் பின்தொடர்ந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரவு 10 மணியளவில் சாம்பல் நிற செடான் கார் ஒன்று அதிவேகமாகச் சென்றதை தொடர்ந்து,பல போக்குவரத்து போலீஸ் மோட்டார் சைக்கிள்களும் போலீஸ் கார்களும் சைரன் ஒலியுடன் அந்த காரைப் பின்தொடர்ந்தன.
மரைன் பரேட் சாலையில் விபத்தில் சிக்கிய பின்னரே அந்த கார் நின்றதாக இணையத்தில் பகிரப்பட்ட காணொளிகள் காட்டுகின்றன.