என்னது சிங்கப்பூரில் DBS வங்கி சேவையை பயன்படுத்தினால் 3 வெள்ளி தள்ளுபடியா?

என்னது சிங்கப்பூரில் DBS வங்கி சேவையை பயன்படுத்தினால் 3 வெள்ளி தள்ளுபடியா?

சிங்கப்பூரின் 60 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் DBS வங்கி இந்த ஆண்டு 2025 ஜூலை முதல் செப்டம்பர் வரை தொடர்ச்சியாக சலுகைகளை அறிவித்தது.

இதில் மிகவும் பிரபலமான ஒன்று வாராந்திர 3 வெள்ளி தள்ளுபடி நிகழ்வு.

அத்துடன் 60 சென்ட் மற்றும் 6 வெள்ளி சாப்பாட்டு தள்ளுபடிகள்,ஹொக்கர்,ஈர சந்தை மற்றும் சுற்றுப்புற கடைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.அதன் மொத்த தள்ளுபடி சுமார் 2 மில்லியனை எட்டும்.

ஜூலை 12 முதல் செப்டம்பர் 27 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் Pay Lay! பயன்படுத்தும் முதல் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு தீவு முழுவதும் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில் பணம் செலுத்தினால் அவர்களுக்கு மூன்று வெள்ளி வரை ரொக்க தள்ளுபடி பெறுவார்கள் என்று DBS வங்கி இன்று(29.06.2025) ஒரு அறிக்கையை வெளியிட்டது.

கூடுதலாக ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை POSB எவ்ரிடே கார்டு மற்றும் Passion POSB டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஓல்ட் சாங் கி,பிரெட் டாக், டோஸ்ட் பாக்ஸ் மற்றும் போலார் பஃப்ஸ் & கேக்குகளில் 60% தள்ளுபடி பெறலாம்.

KFC 6 வெள்ளி சிறப்பு செட்டு உணவையும் அறிமுகப்படுத்துள்ளது. (குறைந்த அளவு கையிருப்பு முடியும் வரை இத்தள்ளுபடி இருக்கும்).

கூடுதலாக செப்டம்பர் 5 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலையில் பொதுமக்கள் மெரினா பேயின் இலவச படகு சவாரிக்கும் பதிவு செய்யலாம்.

வார இறுதியில் எஸ்பிளனேடின் DBS அறக்கட்டளை வெளிப்புற இலவச இசை நிகழ்ச்சிக்கும் திரைப்பட நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளது.

இதைப் பற்றி டிபிஎஸ் வங்கியின் சிங்கப்பூர் தலைவர் லின் சின்சுவான் கூறுகையில் இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் பொதுமக்கள் மற்றும் வணிகங்களின் அன்றாட செலவுகளை எளிதாக்கவும் சமூகத்தில் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் முடியும் என்று நம்புகிறோம் என்றார்.

Pay Lah! ஸ்கேன் குறியீடு கட்டண பரிவர்த்தனைகளில் 70% அதிகமாக உள்ளூர் வாசிகளால் சுற்றுப்புறத்தில் உணவு மற்றும் அன்றாட தேவைகளை வாங்க பயன்படுத்தப்படுகின்றன, என்று டிபிஎஸ் வங்கி சுட்டிக்காட்டி உள்ளது.

கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் மூலமாக 14 மில்லியன் வெள்ளிக்கு மேல் மானியங்களை வழங்கியது டிபிஎஸ், இதில் தள்ளுபடி பெறுபவர்களில் 39% வயதானவர்கள் அல்லது 2500 வெள்ளிக்கும் குறைவான மாத வருமானம் கொண்ட குடும்பங்கள்.

திட்டத்தில் பங்கேற்கும் விற்பனையாளர்கள் ஒவ்வொரு வார இறுதியிலும் சராசரி பரிவர்த்தனை அளவு சுமார் 40% அதிகரிப்பதாக தெரிவித்தனர்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan