சிங்கப்பூரில் உரிய அனுமதி இல்லாமல் மசாஜ் சேவை வழங்கிய மையங்கள்!!
பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களை தொடர்ந்து காவல்துறையினர் 181 சீன மருத்துவ மையங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டனர் அவற்றில் 11 மருத்துவமனைகள் உரிமம் இல்லாமல் மசாஜ் சேவைகளை வழங்குவதை கண்டறிந்துள்ளனர்.
மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒரு மருத்துவமனையின் பெண் ஊழியரும் கைது செய்யப்பட்டார்.
இந்த ஆண்டு 2025 பிப்ரவரி 7 முதல் ஏப்ரல் 14 வரை இந்த சீன மருத்துவமனைகளுக்கு எதிராக காவல்துறை அமலாக்கம் நடவடிக்கையை தொடங்கியதாக காவல்துறை இன்று (ஜுன் 28ஆம் தேதி) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆய்வு செய்யப்பட்ட பெரும்பாலான TCM கிளினிக்குகள் விதிமுறைகளுக்கு இணங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் பதினோரு மருத்துவமனைகளில் வாடிக்கையாளர்களுக்கு மசாஜ் சேவைகளை வழங்கும் சான்றிதழ் பெறாத நபர்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.