இரண்டு வாரத்தில் 260 பேர் சிக்கிய காரணம் என்ன..?

இரண்டு வாரத்தில் 260 பேர் சிக்கிய காரணம் என்ன..?

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தீவு முழுவதும் போலீசார் மேற்கொண்ட அதிரடி அமலாக்க நடவடிக்கையில், மொத்தம் 260 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும் இவர்கள் சந்தேகத்திற்குரிய மோசடி மற்றும் பண மோசடி செய்த குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டனர்.மொத்த பண மோசடி தொகை S$92,000 ஆகும்.

வணிக விவகாரத் துறையும் ஏழு காவல் நிலையங்களும் இணைந்து, இந்த மாதம் 12 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை இரண்டு வாரங்கள் தீவிர சோதனை நடத்தினர்.

போலீசார் இன்று அதிகாலையில் வெளியிட்ட அறிக்கையில் 16 முதல் 83 வயதிலான 165 ஆண்களும், 95 பெண்களும் விசாரணைக்கு உட்பட்டதாக தெரிவித்தனர்.

அவர்கள் மீது மின் வணிக மோசடிகள், போலி நண்பர்கள் அல்லது அரசு அதிகாரிகளாக நடித்து பண மோசடி செய்தல், வேலை தேடுதல் மோசடிகள், முதலீட்டு மோசடிகள், வாடகை மோசடிகள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் குறித்துப் புகார் பதிவாகியுள்ளது.

அத்துடன், சந்தேக நபர்கள் மோசடி, பணமோசடி மற்றும் உரிமம் பெறாத கட்டண சேவைகள் வழங்கியிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் குற்றத்திற்கு உடந்தையாக இருக்காமல் இருக்க, தங்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் மொபைல் எண்களை பிறருக்குக் கொடுக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK