சிங்கப்பூரில் தனியார் குடியிருப்பு தளத்திற்கான ஏலத்தை வென்றது யார்?
சிங்கப்பூர்: துவான் லின் சாலையில் நகர்ப்புற மறு வளர்ச்சி ஆணையத்தால் தொடங்கப்பட்ட உள்ள தனியார் குடியிருப்பு தளத்திற்கான ஏலத்தை ஒரு கூட்டமைப்பு குழு வென்றுள்ளது.
இந்த ஏலத்தை வென்ற கூட்டமைப்புக்குழு: சிங் ஹோல்டிங்ஸ் மற்றும் சன்வே டெவலப்மென்ட் என்ற குழுமம் ஆகும்.
சிங் ஹோல்டிங்ஸ் மற்றும் சன்வே டெவலப்மென்ட் கூட்டமைப்பு குழுவானது அதிகப்படியாக $623.91 மில்லியன் மதிப்புள்ள ஏலத்தை எடுத்துள்ளது. இந்த இடமானது ஐந்து ஏலங்களை ஈர்த்துள்ளது.
99 ஆண்டுகளாக குத்தகை தளமான தனியார் குடியிருப்பு தளம் தோராயமாக 14,514 சதுர மீட்டர் நிலப்பரப்பை கொண்டுள்ளது.
கிட்டத்தட்ட 43,543 சதுர மீட்டர் தரை பரப்பளவை கொண்டுள்ளது.