அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இதய சிகிச்சை நிபுணர்களுக்காக உலகளாவிய மாநாடு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.
இந்த மாநாட்டில் டெல்லி பத்ரா மருத்துவமனை டீனும் இதய சிகிச்சை நிபுணருமான டாக்டர் உபேந்திரா கவுல், டுக்ஸ்டோ-2 என்ற பெயரில் உள்ள இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளை சமர்ப்பித்தார்.
இந்த பரிசோதனை டாக்டர் கவுல் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை தலைவராக இருந்தவர் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் பால், திட்ட இயக்குனராக பணியாற்றியவர் டாக்டர் பிரியதர்ஷினி ஆவார்.
இந்த பரிசோதனையின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை இதய ஸ்டண்ட் “சுப்ராப்ளக்ஸ் க்ரஸ்” மற்றும் சர்வதேச அளவில் கிடைக்கும் அமெரிக்க தயாரிப்பு “ஜீன்ஸ்” இதய ஸ்டாண்டும் ஒப்பிடப்பட்டு உள்ளதாக டாக்டர் கவுல் கூறினார்.
மேலும் இந்த ஆய்வு குறித்து தெரிவித்ததாவது: இந்தியாவில் 66 இதய சிகிச்சை மையங்களில் இந்த பரிசோதனையானது நடத்தப்பட்டது மேலும் நீரிழிவு மற்றும் இதயத்துக்கு ரத்தம் செலுத்தும் மூன்று முக்கிய நாளங்களிலும் அடைப்பு உள்ளவர்களுக்கு இந்திய தயாரிப்பில் ஸ்டண்ட் பொருத்தி பரிசோதிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.
பரிசோதித்த நபர்களில் 80 சதவீதம் பேர் மூன்று முக்கிய ரத்த நாளங்களிலும் அடைப்பு உள்ளவர்களாவர். இந்த பரிசோதனையானது இந்திய தயாரிப்பு “சுப்ராப்ளக்ஸ் க்ரஸ்” ஸ்டண்ட் சர்வதேச தரத்தின் அடிப்படையில் ஸ்டேண்டுக்கு எந்த விதத்திலும் குறைபாடு எதுவும் இல்லை என்பதை இந்த சோதனையின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள சூரத் நகரில் இந்த ஸ்டண்ட் ஆனது தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதை டாக்டர் கவுல் கூறினார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை இதய ஸ்டண்டுக்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளது.