போதைப் பொருள் கடத்தி பிடிபட்ட பெண்..!!

போதைப் பொருள் கடத்தி பிடிபட்ட பெண்..!!

சிங்கப்பூரிலிருந்து நியூசிலாந்து இருக்கு பயணம் செய்த பெண் ஒருவர் போதைப் பொருள் கடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

33 வயதைச் சேர்ந்த நியூசிலாந்து பெண் ஜனவரி 4ஆம் தேதி அன்று ஆக்லாந்து விமான நிலையத்தை அடைந்துள்ளார்.

அப்போது அவரது பயணப்பெட்டியை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் 18 பொட்டலங்கள் இருந்ததாகவும் அது போதைப்பொருள் என்பதையும் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

நியூசிலாந்திற்குள் போதை பொருள் கொண்டு வந்ததாக அந்தப் பெண் மீது ஜனவரி 5ஆம் தேதி அன்று குற்றம் சுமத்தப்பட்டது.

போதைப் பொருளானது இவரிடம் சுமார் 18.45 கிலோ எடையுள்ள மெத்தம்ஃபெட்டமின் வகையைச் சேர்ந்தது உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதனுடைய தோராய மதிப்பானது $4.1 மில்லியன் மதிப்பாகும்.

ஏப்ரல் மாதம் வரை இவர் விசாரணை காவலில் வைக்கப்படுவார் எனவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரியவந்துள்ளது.

பயணப்பெட்டியில் என்ன உள்ளது என்பது தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அதில் போதைப்பொருள் இருந்தாலே கைது செய்யப்படுவீர்கள் என பயணிகளுக்கு ஆக்லாந்து விமான நிலையத்தின் உடைய சுங்கத்துறை மேலாளர் பால் வில்லியம்ஸ் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

போதைப் பொருளிடமிருந்து நியூசிலாந்து மக்களை பாதுகாப்பதிலும் போதைப் பருளால் ஏற்படக்கூடிய பாதிப்பை குறைப்பதிலும் நியூசிலாந்து சுங்கத்துறை மிகவும் கவனமுடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK