சுவிட்ச் 2025:டிஜிட்டல் யுகத்தில் குடும்ப பாசத்தை மீட்ட இளம் புதுமையாளர்கள்..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் புதுமை மற்றும் தொழில்நுட்ப வாரமான ‘சுவிட்ச் 2025’ (SWITCH 2025) அக்டோபர் 29, 30 தேதிகளில் சேண்ட்ஸ் எக்ஸ்போ மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. தொழில்துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் இளம் தொழில்முனைவோர் மற்றும் புதுமையாளர்கள் இதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் CPInO தொழில்முனைவோர் மையம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக பங்கேற்று, அடுத்த தலைமுறையின் படைப்பாற்றலான புதுமைகளை முன்னிறுத்தியது.

18 வயது மாணவி ஸ்டீபன் ஃபியோனா ரோஷ்னி தம் குழுவினருடன் இணைந்து உருவாக்கிய ‘ஹார்மனி குவெஸ்ட்’ என்ற அட்டை விளையாட்டு, குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்றார்.“இந்த விளையாட்டு, பரபரப்பான டிஜிட்டல் உலகில் குடும்பங்கள் அர்த்தமுள்ள உரையாடல்களை பகிரும் இடமாக செயல்படுகிறது,” என ஃபியோனா கூறினார்.

அதேபோல், குகனேஷ்வரன் தியாகராஜன் (24) மற்றும் கிரிஷ் கமல் (19) ஆகியோர் உருவாக்கிய ‘லா லா லேண்ட்’ (La La Land) என்ற சிங்கப்பூர் கருப்பொருள் கொண்ட விளையாட்டு, மறதிநோயாளிகள் மற்றும் மூத்தவர்களுடன் உணர்ச்சிப் பிணைப்பை ஏற்படுத்துகிறது.“நாங்கள் உருவாக்கிய விளையாட்டு தலைமுறைகளை இணைக்கிறது. எங்கள் மதிப்பு ‘இரக்கம்’ — நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்பதே நோக்கம்,” என அவர்கள் தெரிவித்தனர்.

இந்த மாணவர்களின் திட்டங்கள், கார்டன்ஸ் பை த பே பகுதியில் 10 நாட்களில் 500க்கும் மேற்பட்டோரின் பங்கேற்பை பெற்றது. எதிர்காலத்தில் அவர்கள் மருத்துவத் துறையில் புதிய வருவாய் வழிகளை ஆராயத் திட்டமிட்டுள்ளனர்.

சிங்கப்பூர் தனது 60வது ஆண்டு விழாவையும், சுவிட்ச் தனது 10வது பதிப்பையும் கொண்டாடும் இந்த ஆண்டில், இளைய தலைமுறையினரின் புதுமை முயற்சிகள் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளன.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK