சோதனைச் சாவடியில் பிடிபட்ட 35 வயது மலேசியா ஓட்டுநர்..!! காரணம் என்ன..??

சோதனைச் சாவடியில் பிடிபட்ட 35 வயது மலேசியா ஓட்டுநர்..!! காரணம் என்ன..??

துவாஸ் சோதனை சாவடியில் உள்ள சட்ட அமலாக்க அதிகாரிகள் மார்ச் 6 ஆம் தேதி, மேற்கொண்ட வழக்கமான சோதனையின் போது டேங்கர் லாரியின் படங்களில் சந்தேகப்படும்படி படங்கள் இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள் உடனடியாக வாகனத்தை சோதிக்க ஆரம்பித்தனர்.

அப்போது மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு டேங்கர் லாரி 3,400-க்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டிகளில் கணக்கில் காட்டாத சிகரெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், 35 வயது மலேசியா ஓட்டுநர் கடத்தி வந்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டார்.

கைது செய்த ஓட்டுனரையும் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளையும் மேல்விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்த தகவலை குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையமானது இன்று(மார்ச் 13ஆம் தேதி) பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறது.

மேலும், எல்லையை தொடர்ந்து பாதுகாப்பது தடை செய்யப்பட்ட மற்றும் தவிர்க்கப்பட்ட எந்த ஒரு பொருட்களையும் நாட்டிற்குள் வருவதற்கு அனுமதிக்கப்படாது எனவும் தேசிய பாதுகாப்பை பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தியுள்ளது.

 

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK