அர்ஜென்டினா: விக்டோரியாவிற்கு அருகே பரானா நதி உள்ளது. இந்த இடமானது பியூனஸ் ஹையர்சிலிருந்து வடமேற்க்காக சுமார் 29 மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு நகரமாகும்.
இதில் கோடை விடுமுறையின் போது உள்ளூர் வாசிகள் நேரத்தை செலவழிப்பதற்கான ஒரு பிரபலமான இடமாக கருதப்படுகிறது.
அவ்வப்போது அங்கு சென்ற சிலரை இந்த மீன் கடித்ததால், குறைந்தது 46 பேர் படுகாயம் அடைந்ததுடன் ஒருவருக்கு விரல் இல்லாமல் போனது.
இதனால் அந்த இடமானது தடை செய்யப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதி இல்லை.
அந்தப் பகுதியில் நீந்தும் போது இந்த மீன் தாக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட பலரும் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அதிக எண்ணிக்கையில் காயமடைந்து உளளதால் இந்த மீன்கள் திரியும் நீர் நிலைகளில் இருந்து சற்று விலகி இருக்குமாறு பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்காகவும் இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்காகவும் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களுடன் குறிக்கப்பட்டுள்ளது உள்ளூர் மருத்துவமனைகள் பொதுமக்களுக்கு நினைவூட்டி உள்ளது.