பொங்கலுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை..!!இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க..!!

பொங்கலுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை..!! இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க..!!

2026ம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ பொது விடுமுறைப் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில், வரும் 2026ல் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் பல முக்கிய பண்டிகைகள் வாரத்தின் தொடக்கத்திலோ அல்லது இறுதியிலோ வருவதால், அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தொடர் விடுமுறைகள் அதிகம் கிடைக்கவுள்ளன.

2026ம் ஆண்டு ஜனவரி மாதம் அரசு ஊழியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரவுள்ளது. குறிப்பாகத் தைப்பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜனவரி 15) வருகிறது.

ஜனவரி 15 (வியாழன்): பொங்கல், ஜனவரி 16 (வெள்ளி): திருவள்ளுவர் தினம், ஜனவரி 17 (சனி): உழவர் திருநாள் (பொது விடுமுறை), ஜனவரி 18 (ஞாயிறு): வார விடுமுறை. இதனால் ஜனவரி 15 முதல் 18 வரை நான்கு நாட்கள் நேரடியாக விடுமுறை கிடைக்கிறது.

ஒருவேளை ஜனவரி 14 (புதன்) போகிப் பண்டிகைக்காகச் சிறப்பு விடுமுறை அல்லது ஒரு நாள் தற்செயல் விடுப்பு (CL) எடுத்தால், மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அடுத்த ஆண்டு வார நாட்களில் வரும் முக்கிய விடுமுறைகளின் பட்டியல்:
ஜனவரி: புத்தாண்டு (ஜன 1 – வியாழன்), குடியரசு தினம் (ஜன 26 – திங்கள்).

பிப்ரவரி: தைப்பூசம் (பிப் 1 – ஞாயிறு).

மார்ச்: தெலுங்கு புத்தாண்டு (மார்ச் 19 – வியாழன்), ரம்ஜான் (மார்ச் 21 – சனி), மகாவீர் ஜெயந்தி (மார்ச் 31 – செவ்வாய்).

ஏப்ரல்: புனித வெள்ளி (ஏப் 3 – வெள்ளி), தமிழ்ப் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்தநாள் (ஏப் 14 – செவ்வாய்).

மே: மே தினம் (மே 1 – வெள்ளி), பக்ரீத் (மே 28 – வியாழன்).

ஜூன்: மொஹரம் (ஜூன் 26 – வெள்ளி).

ஆகஸ்ட்: சுதந்திர தினம் (ஆக 15 – சனி), மிலாது நபி (ஆக 26 – புதன்).

செப்டம்பர்: கிருஷ்ண ஜெயந்தி (செப் 4 – வெள்ளி), விநாயகர் சதுர்த்தி (செப் 14 – திங்கள்).

அக்டோபர்: காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2 – வெள்ளி), ஆயுத பூஜை (அக்டோபர் 19 – திங்கள்), விஜயதசமி (அக்டோபர் 20 – செவ்வாய்).

நவம்பர் & டிசம்பர்: தீபாவளி (நவ 8 – ஞாயிறு), கிறிஸ்துமஸ் (டிச 25 – வெள்ளி).

2026-ஆம் ஆண்டில் தீபாவளி (நவம்பர் 8) மற்றும் தைப்பூசம் (பிப்ரவரி 1) ஆகிய இரண்டு முக்கிய விசேஷங்கள் மட்டுமே ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன.

மற்ற 22 விடுமுறை நாட்களும் வார நாட்களிலேயே வருவதால், விடுமுறை நாட்களின் எண்ணிக்கை குறையாமல் அப்படியே கிடைப்பது அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வார இறுதி நாட்களையும் சேர்த்துக் கணக்கிட்டால், 2026-ஆம் ஆண்டில் ஏறத்தாழ 100 நாட்களுக்கு மேல் அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK