சிங்கப்பூரில் சிக்கிய 82 பேர்!! ஏன்? எதனால்?

சிங்கப்பூரில் சிக்கிய 82 பேர்!! ஏன்? எதனால்?

சிங்கப்பூரில் நடத்திய மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தீவு முழுவதும் அதிரடி சோதனை நடத்தியது.இந்த அதிரடி சோதனையில் $130000 க்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தேக நபர்களாக 82 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த அதிரடி சோதனை ஜூன் 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த சோதனை அங் மோ கியோ,ரெட்ஹில்,சாங்கி,புங்கோல்,உட்லண்ட்ஸ் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டது.

இந்த தகவலை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோகிராமுக்கு அதிகமான கஞ்சா, 700 கிராமுக்கு அதிகமான ஹெராயின்,மெத்தம்பேட்டமைன்,எக்ஸ்டசி மாத்திரைகள் உட்பட $132000 க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஒரு சோதனை நடவடிக்கையில் அதிகாரிகள் 30 வயதுடைய இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறார்.

மேலும் அவரது இடத்தில் ஒரு கிலோகிராம் கஞ்சா மற்றும் 19 கிராம் மெத்தம்பேட்டமைன், அதன் போதைப்பொருள் உபகரணங்கள் மற்றும் ரொக்கத்தொகையும் பறிமுதல் செய்யப்பட்டது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan