சிங்கப்பூரில் 92 பேரை விசாரிக்கும் காவல்துறை..!!! காரணம்..??

சிங்கப்பூரில் 92 பேரை விசாரிக்கும் காவல்துறை..!!! காரணம்..??

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சட்டவிரோத கடன் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் 92 பேரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சட்டவிரோத கடன் நடவடிக்கைகளை தடுப்பதற்காக இம்மாதம் 25 முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை தீவு முழுவதும் குற்றப்புலனாய்வுத்துறை,ஏழு காவல் பிரிவுகளுடன் இணைந்து சோதனை நடத்தியதில் அவர்கள் பிடிபட்டனர்.

முதற்கட்ட விசாரணையில்,8 பேர் வீடுகளில் கடன் வாங்குபவர்களை துன்புறுத்தியதாகவும்,26 பேர் ATM இயந்திரங்களில் பணப் பரிவர்த்தனை செய்ய உதவியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் 58 பேர் தங்களது வங்கி கணக்குகளை திறந்து, டெபிட் கார்டுகள், தனிப்பட்ட அடையாள எண்கள் அல்லது ஆன்லைன் வங்கி கடவுச்சொல் போன்றவற்றை கடன் வாங்குபவர்களுக்கு கொடுத்து உதவுவதற்காக சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக தற்போது அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கடன் வழங்குபவர்கள் சட்டத்தின் கீழ், சட்டவிரோத கடன் நடவடிக்கையில் ஈடுபவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால்,4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை,S$30,000 முதல் S$300,000 வரை அபராதம் அல்லது ஆறு பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

சட்டவிரோத கடன் வழங்குபவர்களின் சார்பாகச் செயல்பட்டு மற்றவர்களைத் துன்புறுத்த முயற்சிக்கும் முதல் முறை குற்றவாளிகளுக்கு, குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $5,000 முதல் $50,000 வரை அபராதம் மற்றும் மூன்று முதல் ஆறு பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

சட்டவிரோத கடன் வழங்கும் நபர்களுக்கு உதவி செய்பவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் S$5000 முதல் S$50,000 வரை அபராதமும் மூன்று முதல் ஆறு வரை பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

மேலும் சட்டவிரோத கடன் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு தங்கள் வங்கி கணக்குகளை பயன்படுத்த அனுமதிக்கும் நபருக்கு தண்டனையாக ஒரு வருடத்திற்கு ATM மற்றும் பிற ஆன்லைன் வங்கி சேவைகளை பயன்படுத்த தடை விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் இதுபோன்ற சட்டவிரோத கடன் நடவடிக்கைகளில் ஈடுபவர்கள் குறித்து தெரிய வந்தால் 1800-255-0000 என்ற காவல்துறை எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் அல்லது www.police.gov.sg/i-witness என்ற இணையதளம் வழியாக தகவல் தெரிவிக்கலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK