சிங்கப்பூர்: பேருந்து நிலையம் to விளையாட்டு மைதானம்..!!மாறியது ஏன்..??

சிங்கப்பூர்: பேருந்து நிலையம் to விளையாட்டு மைதானம்..!!மாறியது ஏன்..??

சிங்கப்பூரில் உள்ள பேருந்து முனையும் கூரையிடப்பட்ட காத்திருப்பு பகுதி ஒன்று தற்போது ஒரு புதிய விளையாட்டு மைதானமாக உருமாற்றம் கொண்டுள்ளது.

தற்போது புதிதாக திறக்கப்பட்ட Activesgcourts@fairerpark என்ற வசதியில் 8 ‘பிக்கல் பால்’ மைதானங்கள் தற்போது இடம்பெற்றுள்ளது.

இந்த புதிய விளையாட்டு மைதானத்தை தேசிய வளர்ச்சி, வர்த்தக, தொழில் துணை அமைச்சரான ஆல்வின் டான் நேற்று (மார்ச் 14) அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

சிங்கப்பூரில் தற்போது விளையாட்டு வசதிகள் தேவையாக உள்ள காரணத்தினால் அதிகம் பயன்படுத்தப்படாத நகர்ப்புற இடங்களை மறு பயன்பாட்டுக்காக மாற்றப்பட்டு வருகிறது என்பதை கூறினார்.

மேலும் விளையாட்டு கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கு தேசிய முயற்சியின் ஒரு அங்கமாக இந்த திட்டம் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

சிங்கப்பூர் முழுவதுமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பூப்பந்து பிக்கல் பால், விளையாட்டுகளுக்கு கூடுதலாக 50 விளையாட்டு மைதானங்கள் புதிதாக கட்டுவதற்கான திட்டங்கள் தற்போது இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் விவாதத்தின் போது கலாச்சார, சமூக இளைஞர் துறை அமைச்சகம் விவாத மேற்கொண்டு அதைப்பற்றி கலந்துரையாடியது.

சிங்கப்பூர் பேருந்து முனையமானது வெளிநாட்டு ஊழியர் போக்குவரத்து சேவைகளுக்காக வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்தப்படும். மீதமுள்ள நாட்களில் அது பயன்பாட்டுக்கு இல்லை.

ஸ்போர்ட்ஸ் எஸ் ஜி நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகிய இரண்டிற்கும் இடையிலான இந்த ஒரு நல்ல ஒருங்கிணைப்பின் மூலமாக விளையாட்டுக்காக இந்த திட்டத்தை பயன்படுத்துவதில் முடிவு செய்ததாக திரு டான் கூறினார்.