சிங்கப்பூரில் 53 வயது லாரி ஓட்டுநர் கைது..!!

சிங்கப்பூரில் 53 வயது லாரி ஓட்டுநர் கைது..!!

“கம்ப்ளைன்ட் சிங்கப்பூர்” என்ற முகநூல் குழு பக்கத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 15) இணையவாசிகள் சில புகைப்படங்களை பதிவேற்றியுள்ளனர்.

விபத்து சம்பந்தப்பட்ட புகைப்படங்களும் காவல்துறையினர் விசாரிப்பது குறித்த புகைப்படங்களை பதிவிடப்பட்டிருந்தது.

சிங்கப்பூரில் மிங்டி மியா சாலையில் 53 வயதான லாரி ஓட்டுநர் மது போதையில் கவனமின்றி வாகனம் ஓட்டி சென்று டாக்ஸி மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.

இந்த விபத்தில் லாரியினுடைய வலது முகப்பு விளக்கானது சேதம் அடைந்துள்ளது.

இந்த விபத்து குறித்த தகவலானது, மார்ச் 15ஆம் தேதி மதியம் சுமார் 1:55 மணி அளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஓட்டுனரை விசாரித்த போது அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியது உறுதி செய்யப்பட்டது.

இந்த விபத்தினால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. மேலும் காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK