சிங்கப்பூரில் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் உயர்வு..!!

சிங்கப்பூரில் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் உயர்வு..!!

சிங்கப்பூரில் மின்சாரம் மற்றும் நகர எரிவாயு கட்டணங்கள் போன்றவைகளின் விலையானது உயர வாய்ப்புள்ளது என்று எரிசக்தி சந்தை ஆணையம் (EMA) தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் சூழல் காரணமாக, வரும் இரண்டாம் காலாண்டுக்கு பிறகு கட்டணங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் ஆணையம் கூறியுள்ளது.

சிங்கப்பூர் தனது எரிசக்தி சேவைகளுக்கு இறக்குமதியை மட்டுமே பெரிதாக நம்பி உள்ளது. 95% மின்சாரமானது இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயு மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது.

நகர எரிவாயுவின் தயாரிப்பில் இந்த இயற்கை எரிவாயு முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்பொழுது உள்ள சூழ்நிலையில் உலகளாவிய எரிபொருட்களின் விநியோகத் தொடரானது மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இந்த காரணங்களால் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் அதிகமாக உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வானது எதிர்காலத்திலும் தொடரும் என்றும் சொல்லப்படுகிறது.

ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்கள் வரையில் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்களில்  பகுதி அளவு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆணையம் கூறியுள்ளது.

ஒரு காளானிற்கான கட்டணங்கள் அதற்கு முந்தைய காலாண்டின் முதல் மற்றும் இரண்டரை மாதக் காலச் சராசரி எரிபொருள்களை வைத்து கணக்கிடப்படுகிறது.அதாவது ஏப்ரல் முதல் ஜூன் காலகட்டத்திற்கான கட்டணங்கள் ஜனவரி முதல் மார்ச் பாதி வரையிலான விலையை அடிப்படையாகக் கொண்டவை.

இயற்கை எரிவாயு விலை உயர்வால், அடுத்தடுத்த காலாண்டுகளில் முழு பாதிப்பும் தெரியவரும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

மின்சாரச் சில்லறை விற்பனை ஒப்பந்தங்களில் உள்ளவர்கள் ஒப்பந்தங்களைப் புதுப்பிக்கும் போது விலைகளின் மாற்றங்களை சந்திக்க நேரிடலாம் என்றும் தெரிவித்துள்ளது.

விலை உயர்வை சமாளிக்கப் பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், மின்சாரத்தை சேமிக்க உதவும் சாதனங்களைப் (Energy-efficient)பயன்படுத்துமாறும் எரிசக்தி சந்தை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் செலவுகள் குறைவதோடு மட்டுமல்லாமல் அது சிங்கப்பூரின் எரிசக்தி பாதுகாப்புக்கும் வழி வகுக்கும்.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK