இந்த மாத (ஏப்ரல்) இறுதியில் ஜனநாயகன் ரிலீஸ்…!!

இந்த மாத (ஏப்ரல்) இறுதியில் ஜனநாயகன் ரிலீஸ்...!!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்தச் செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் வெளியிட முடியவில்லை.

இதனை அடுத்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தணிக்கை வாரியத்தின் மேல்முறையீடு என இந்த படத்தின் தயாரிப்பாளர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

அனைத்து சிக்கல்களும் தீர்வு காணப்பட்டு விட்டதாகவும் இந்த மாத கடைசி வாரத்தில் படம் வெளியாகும் என்று படக்குழு கூறியுள்ளது.

எதிர் வருகின்ற ஏப்ரல் 24 அல்லது ஏப்ரல் 30 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு தேதியை தயாரிப்பு தரப்பு தேர்வு செய்து படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கிடையில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துவிடும் என்பதால் அரசியல் ரீதியில் இந்த படத்திற்கு சிக்கல் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை என விஜய் தரப்பு வருதவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பட வெளியீட்டை பெரிய அளவில் கொண்டாட விஜய் ரசிகர்களும் தாவிக்க தொண்டர்களும் தற்போது உற்சாகத்துடன் தயாராகி வருகிறார்கள்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK