உச்ச நீதிமன்றம் கண்டனம்..!! தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!!
புதுடெல்லி: தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 34 லட்சம் பேர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் வழக்கம் போல் தேர்தல் களம் சூடு பிடித்த வண்ணம் உள்ளது. அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு (SIR) ஆரம்பத்திலிருந்து கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தது.
திருத்த நடவடிக்கைகளுக்காக (SIR) மற்ற மாவட்டங்களில் இருந்து மால்டா மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்ட நீதித்துறை அதிகாரிகளில் சிலர் அண்மையில் சில மணி நேரம் சிறைபிடிக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
SIR நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீடுகள் நிலுவையில் இருந்த நிலையில், விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் 34 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியற்றவர்கள் என உச்ச நீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 13) தீர்ப்பளித்துள்ளது .
இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜியும், மேற்குவங்க அரசாங்கத்தரப்பும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் அரசியல் சாசனம் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த உணர்வுபூர்வமான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தல் காலம் என்பதால் கண்மூடித்தனமாக அந்த உரிமையை நாம் புறக்கணித்து விட முடியாது. மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் மேற்கு வங்காளத்தில் மட்டுமே இத்தகை திடீர் நீக்கம் மேற்கொள்ளப்பட்டிருப்பது ஒரு தலைப்பட்சமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக தெரிகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படால் இருப்பது கவலை அளிப்பதாகவும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோர் முன்வைக்கும் குறைகளைத் தீர்க்க பலமான மேல்முறையீட்டு நடைமுறை நமக்குத் தேவைப்படுகிறது எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
“பீகார் சட்டமன்ற தேர்தலின் போது ஒரு நிலைப்பாடு, இப்போது வேறு ஒரு நிலைப்பாடு என இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சமான அணுகுமுறையைக் கொண்டுள்ளதாக நீதிபதிகள் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.