சிங்கப்பூரில் உயரும் பணவீக்கம் ..!! MAS அறிவிப்பு..!!
சிங்கப்பூர் : சிங்கப்பூர் பணவியல் ஆணையம் (MAS), தனது முழு ஆண்டுக்கான பணவீக்கக் கணிப்பு உயர உள்ளதாக அறிவித்துள்ளது.
அண்டை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் இயற்கை வாயு மற்றும் எரிபொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள காரணத்தினால், வரவிருக்கும் மாதங்களில் எரிவாயு, மின்சாரம் மற்றும் போக்குவரத்து தொடர்பான பணவீக்கமானது நேரடியாக அதிகரிக்கக்கூடும்.
இந்த காரணங்களால் சிங்கப்பூரின் இந்த ஆண்டு முக்கிய மற்றும் ஒட்டு மொத்த பணவீக்க கணிப்புகள், இன்று காலை 0.5% புள்ளிகள் மேல் நோக்கி காணப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் பணவியல் ஆணையம் இது குறித்து கூறியதாவது: மத்திய கிழக்கில் விநியோகம் மீண்டு வந்தாலும், போக்குவரத்து தாமதங்கள், விநியோகத்தை மீட்டெடுக்க தேவைப்படும் நேரம் மற்றும் நாடுகள் எரிசக்தி இருப்புகளை மீண்டும் உருவாக்கும் போது ஏற்படும் தேக்கநிலை ஆயவற்றின் காரணமாக உலகளவில் எரிசக்தி விலைகள் உயர்வாகவே இன்னும் சில காலத்திற்கு இருக்கும்.
உலகளவில் எரிசக்தி செலவுகள் உயர்ந்து வருவதால், சிங்கப்பூரில் இறக்குமதி செலவுகள் அதிகரிக்கும். இறக்குமதி செய்யப்படும் இடைநிலை மற்றும் இறுதி நபர் பொருட்களின் விலைகள் ஆனது அதிகரிக்க வாய்ப்புள்ளது.
MAS தனது முழு ஆண்டுக்கான முக்கிய மற்றும் ஒட்டுமொத்த பணவீக்க கணிப்புகளை 1.0% முதல் 2.0% என்பதிலிருந்து 1.5% முதல் 2.5% ஆக அதிகரித்து திருத்தியுள்ளது.
எரிபொருள்களின் விலை உயர்வால் தனியார் போக்குவரத்தில் பணவீக்கம் அதிகரிக்கும். ஆனால் கடந்த ஆண்டில் வீட்டு வாடகை வளர்ச்சி மெதுவாக இருந்த காரணத்தால் தங்குமிட பணவீக்கம் குறைவாகவே காணப்படும். இந்த பணம் வீக்கக் குறைவானது பாதிப்பை ஓரளவு ஈடு செய்யும்.
இந்த ஆண்டு (2026) சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி படிப்படியாக குறையும் எனவும், உற்பத்தியில் இடைவெளி சராசரியாக பூஜ்ஜியத்திற்கு அருகில் இருக்கும் எனவும் MAS குறிப்பிட்டுள்ளது.