சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய சாலை விபத்து..!!

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய சாலை விபத்து..!!

சிங்கப்பூர் குடி வரவு மற்றும் சோதனை சாவடிகள்(ICA) ஆணையம் இன்று (ஏப்ரல் 14) பிற்பகல் சுமார் 3:16 மணியளவில் முகநூல் பக்கத்தில் ஒரு பரபரப்பு செய்தியை பதிவிட்டுள்ளது.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு செல்லும் தரை பாலத்தில் காஸ்வேயில் திடீரென சாலை விபத்து ஏற்பட்டது. இதனால் மூன்று வழிதடங்களில் ஒரு வழித்தடம் ஆனது முற்றிலுமாக தடைப்பட்டது.

உட்லண்ட்ஸ் சோதனை சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழைய பயணிகள் தாமதமான நிலையை சந்திக்க நேரிடும் எனவும் மேலும் உடனுக்குடன் அப்டேட்டுகளை தெரிந்து கொள்ள அதிகாரிகளின் முகநூல் பக்கத்தை பார்க்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான தரைப்பாலத்தில் பிற்பகல் சுமார் 3:20 மணியளவில் ஒரு கார் விபத்து நிகழ்ந்ததாகவும் இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் ஒரு இணையவாசி சமூக ஊடக குழுவில் தகவலை பதிவிட்டுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK