சிங்கப்பூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்..!! காரணம் என்ன..??
சிங்கப்பூரில் செம்பவாங் சாலை மற்றும் மண்டாய் காலை சந்திப்புக்கு அருகில் திடீரென ஒரு வாகனத்தின் பின்பக்க டயரில் தீ பற்றி அதிலிருந்து புகை வெளியேறியது.
இது குறித்த காணொளி பதிவானது முகநூலில் பதிவேற்றப்பட்டது. அந்த காணொளி பதிவில் செம்பவாங் சாலை குறிக்கும் அடையாளத்துடன் ஒரு போக்குவரத்து சிக்னல் சந்திப்பில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.
அந்த நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது மேலும் சமூக இடத்திலிருந்து அடர் கருப்பு புகை வெளியேறுவது தெரிந்தது. ஆனால் அந்த காணொளி பதிவில் தீ விபத்து பதிவாகவில்லை.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் (SCDF) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைப்பதற்கு முன்பாகவே அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் உலர் தூள் தீயணைப்பானை பயன்படுத்தி தீயை அணைத்தனர்.
மேலும் இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இந்த விபத்தானது ஏப்ரல் 13-ஆம் தேதி மதியம் சுமார் 1:45 மணியளவில்;செம்பவாங் சாலை மற்றும் மண்டாய் காலை சந்திப்புக்கு அருகில் நடந்ததாக தங்களுக்கு தகவல் கிடைத்ததை கூறியுள்ளனர்.
“சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே அங்கு ட்ரைலர் லாரியின் பின்பக்க டயரில் தீப்பிடித்து புகை வெளியேறியதை கண்ட பொதுமக்கள் தீயை விரைந்து மேலும் பரவாமல் அனைத்து உள்ளனர்”.
தீ விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.