யிஷூனில் $340.9 மில்லியனுக்கு விற்பனையான கட்டுமான இடம்..!! வாங்கியது யார்..??

யிஷூனில் $340.9 மில்லியனுக்கு விற்பனையான கட்டுமான இடம்..!! வாங்கியது யார்..??

சிங்கப்பூர்: யிஷூன் வட்டார பகுதியில் உள்ள மில்டோனியா குளோசில் இருக்கும் கட்டுமான இடத்தில் எக்ஸிக்யூட்டிவ் கூட்டுரிமை குடியிருப்பு கட்டுவதற்கான ஏல அறிவிப்பு வெளியானது.

இதனை அடுத்த இந்த ஏலத்தை ஹோய் ஹப் ரியல்டி கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனமானது தனக்கு எதிராக போட்டியிட்ட இரண்டு நிறுவனங்களை விட அதிக தொகையை முன்வைத்து ஏலத்தை கைப்பற்றியுள்ளது.

கட்டுமான இடத்தை $340.9 மில்லியனுக்கு ஹோய் ஹப் ரியல்டி வாங்கியுள்ளது. மில்டோனியா குளோஸ் பட்டுமான இடமானது சுமார் 43,264 சதுர அடி கொண்டது. இந்த இடத்தின் குத்தகை காலம் 99 ஆண்டுகள் ஆகும். இதில் 430 வீடுகள் கட்டும் அளவு உள்ளது.

இந்த கட்டுமான தளத்தில் உள்ள ஒரு சதுர அடி $732 என்ற விலைக்கு போனது. பொதுவாக இதன் விலை $650-$760 வரை இருக்கும்.

ஹாங் லியோங் குழுமமும் டிஐடி பிரசிடென்ஷியல் நிறுவனமும் சேர்ந்து $312 என்ற விளைத்த இடத்தை வாங்க விரும்பியது. அதாவது ஒரு சதுர அடியை $670 என்ற விலைக்கு வாங்குவதற்கு இந்நிறுவனம் ஆனது திட்டமிட்டிருந்தது.

ஆனால் அதைவிட அதிக ஏலத்தொகையை குறிப்பிட்ட ஹோய் ஹப் ரியல்டி நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்த கட்டுமான தளமானது ரயில் நிலையத்திற்கு அருகே இல்லாததாலும் மேலும் முக்கிய வசதிகள் இல்லாத காரணத்தினாலும் ஐந்திற்கும் குறைவான கட்டுமான நிறுவனங்களையும் ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பியதாக கூறப்பட்டிருக்கிறது

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK