சிங்கப்பூரில் 6 இளைஞர்கள் அதிரடி கைது..!!

சிங்கப்பூரில் 6 இளைஞர்கள் அதிரடி கைது..!!

சிங்கப்பூரில் ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பொங்கோல் டிரைவ் மற்றும் பொங்கோல் சென்ட்ரல் சாலை பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் குறித்த புகார்கள் அதிகமாக கிடைத்ததாக காவல்துறையினர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள் திருடிய குற்றங்களில் 13 முதல் 16 வயதிற்கு உட்பட்ட ஆறு இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை ஆங் மோ கியோ காவல் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது ஆறு நபர்களையும் அடையாளம் கண்டு நேற்று (ஏப்ரல் 14) அன்று அவர்களை கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிளின் சாவியானது சேமிப்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததால் அதனை எளிதாக திருட முடிந்தது என்று முதற்கட்ட விசாரணையின் போது திருடிய நபர்கள் மூலம் தெரிய வந்துள்ளது. திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள் அவர்களிடம் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

அந்த ஆறு இளைஞர்களிடமும் சட்டபூர்வமாக செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 13 முதல் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 15) சிறார் நீதிமன்றத்தில் ஆறு இளைஞர்களும் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஆறு பேர் மீதும் வாகன திருட்டு குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.

திருட்டு அபாயத்தை குறைப்பதற்காக மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் மிகவும் கவனமுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் எனவும் தங்களது வாகனங்களை நன்கு வெளிச்சம் உள்ள இடங்களில் நிறுத்த வேண்டும் என்றும் வளாகத்தை விட்டு வெளியேறும் போது எப்போதும் சாவிகளை கையிலேயே எடுத்துச் சென்று பாதுகாப்பாக பூட்டி வைப்பது உள்ளிட்ட பல பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டி உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK