பறக்கும் கார் விற்பனை செய்ய திட்டம்..!! எங்கு..?? எப்போது..??

பறக்கும் கார் விற்பனை செய்ய திட்டம்..!! எங்கு..?? எப்போது..??

சீனாவின் மின் வாகன தயாரிப்பாளரான எக்ஸ்பெங் நிறுவனம் அதன் பறக்கும் கார்களின் புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் தலைவர் பிரையன் கூ அவர்கள் பறக்கும் கார்களின் உற்பத்தியை 2027 ஆம் ஆண்டு தொடங்க திட்டமிட்டுள்ளதாக நேற்று (ஏப்ரல் 23)தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியின் புகழ்பெற்ற வாகன உற்பத்தியாளரான வோக்ஸ்வேகன் நிறுவனத்துடன் ஆன ஒத்துழைப்பை அதிகரித்து மின் வாகன தயாரிப்பை அதிகமாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். இரண்டு நிறுவனங்களும் ஒருங்கிணைந்த செயல்பட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்றும் திரு கூ தெரிவித்துள்ளார்.

வாகன தயாரிப்பில் ஈடுபடும் மற்ற நிறுவனங்களுடனும் தங்களுடைய பங்களிப்புத்துவத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பறக்கும் கார்கள் தொடர்பில் இதுவரை எக்ஸ்பெங் நிறுவனம் 7,000 முன்பதிவுகளை பெற்றுள்ளதை குறிப்பிட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை சீனாவில் செய்யப்பட்டனர். சீன விமான போக்குவரத்து துறை அதிகாரிகளின் ஒப்புதலை பெறுவதற்கு எக்ஸ்பெங் நிறுவனம் காத்திருப்பதாக திரு கூ தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் தென் சீன நகரான குவாங்சூவில் ஓட்டுனர் இல்லாத மின் டாக்ஸிகளை சோதிக்கும் பணி தொடங்க உள்ளதாக கூறினார்

அதனோடு 2027 ஆம் ஆண்டு முழுவதும் உலகின் பல பகுதிகளில் இருக்கும் வர்த்தகர்களிடம் பல சோதனைகள் இடம்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK