ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் ஆலை மூடல்..!! பெட்ரோல் விநியோகம் பாதிக்கப்படுமா..??

ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் ஆலை மூடல்..!! பெட்ரோல் விநியோகம் பாதிக்கப்படுமா..??

குஜராத் மாநிலத்தில் ஜாம் நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஒரு குறிப்பிட்ட பிரிவை தற்காலிகமாக மூட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் வளாகத்தில் உள்ள இந்த பிரிவானதை நாளொன்றுக்கு 6,60,000 பீப்பாய்கள் அளவிலான எண்ணையை சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது.


இந்த பிரிவானது இந்தியாவிற்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியில் முக்கியம பங்கு வகித்து வருகிறது.

தற்பொழுது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பகுறைந்ததோடு மட்டுமல்லாமல் எரிசக்தி நெருக்கடியும் உருவாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை நேரடியாக எந்த பாதிப்பையும் இது ஏற்படுத்தவில்லை என்றாலும், விமான எரிபொருள் மற்றும் வணிக எரிவாய ஆகியவற்றின் விலை அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஒரு சில பொருள்களின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்தியாவுக்கு அரபு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெயும் குறைந்துள்ளது. இந்த நேரத்தில் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் வழக்கமான பராமரிப்பு பணிக்காக ஆடைகள் மூடப்படும்.

அதனால் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலை தற்காலிகமாக மூடப்படுவதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மே மாதத்திற்குள் இந்த பராமரிப்பு பணிகள் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைவதற்கு 4 வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பேசி மத்திய பெட்ரோலிய அமைச்சின் இணைச்செயலாளரான சுஜாதா சர்மா, ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதால் நாட்டில் பெட்ரோல் டீசல் அல்லது எரிவாய்வு தட்டுப்பாடு எந்த வகையிலும் ஏற்படாது என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தேவையான அளவு எரிபொருட்களைக் கையிருப்பில் வைத்துள்ளது எனவும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அதே வளாகத்தில் மற்றொரு சுத்திகரிப்பு நிலையம் உள்ளது, அது வழக்கம் போல இயங்குவதால் எந்த பாதிப்பும் இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK