இந்த அடிதடி சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு நேற்று பிற்பகல் 2:15 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்றுள்ளனர்.
அங்கு சிறு காயத்துடன் இருந்த 27 வயதுடைய அமோஸ் யீ -யை 18 வயதுடைய இளைஞர் தாக்கியதைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். இதையெடுத்து அந்த 18 வயது இளைஞர் பொது இடத்தில் தொந்தரவு விளைவித்த காரணத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்தக் காணொளியில் அனிமே உடை அணிந்த ஒருவர் அமோஸின் சட்டை காவரை பிடித்து அவரை திரும்ப திரும்ப குத்துவது தெரிகிறது. அவர் குத்தியதில் அமோஸ் தரையில் விழுந்துள்ளார். ஆனால் மேலும் அந்த நபர் அவரை பலமுறை உதைத்துள்ளார்.
அதன்பின் அங்கிருந்து அந்த இளைஞர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் திடீரென சட்டென்று திரும்பி மறுபடியும் பின்னால் இருந்து அவரை தள்ளி, பின்னர் தனது முழங்கையால் தலையில் அடித்துள்ளார்.