உட்லண்ட்ஸில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 41 வயது பெண்..!!

உட்லண்ட்ஸில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 41 வயது பெண்..!!

உட்லண்ட்ஸில் உள்ள பல அடுக்கு வாகன நிறுத்தும் இடத்தில் திடீரென கார் சறுக்கி விபத்து ஏற்பட்டது. இது குறித்த புகைப்படத்தை Roads.Sg இன்று இணையதளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.

இந்த புகைப்படத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தும் இடத்தின் நுழைவாயிலுக்கு அருகே ஒரு கருப்பு நிற கார் சறுக்கி கவர்ந்து கிடப்பதும் அதனுடைய சக்கரங்கள் மேலே தூக்கிய படி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது உட்லண்ட்ஸ் டிரைவ் 52, ப்ளாக் 622 வில் உள்ள பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தில் நேற்று (ஜூன் 2) மாலை சுமார் 6.50 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக தகவல் கிடைத்ததை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 41 வயது பெண் ஓட்டுனர் காயமடைந்ததாகவும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்தபோது வர மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

இந்த விபத்து குறித்து 41 வயது பெண் ஓட்டுனர் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார். மேலும் இது குறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK