சிங்கப்பூரில் பாட்டில், கேன்களுக்கு புதிய மாற்றம்..! அக்டோபர் 1 முதல் முக்கிய விதி!

சிங்கப்பூரில் பாட்டில், கேன்களுக்கு புதிய மாற்றம்..! அக்டோபர் 1 முதல் முக்கிய விதி!

சிங்கப்பூரில் கொள்கலன் திரும்பப் பெறும் திட்டம் (Beverage Container Return Scheme – BCRS) மூலம் இதுவரை 3.3 கோடிக்கும் அதிகமான பாட்டில்கள் மற்றும் கேன்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. செப்டம்பர் 13ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 553 டன் பொருட்கள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக பதப்படுத்தப்பட்டுள்ளதாக BCRS Ltd தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சிங்கப்பூரின் Tuas பகுதியில் 2,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய Counting and Sorting Facility அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சேகரிக்கப்படும் பாட்டில்கள் மற்றும் கேன்கள் எண்ணப்பட்டு, அவற்றின் வகைகளுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு, பின்னர் மறுசுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

சேகரிக்கப்பட்ட பொருட்களில் சுமார் 55% பிளாஸ்டிக்என்றும், மீதமுள்ள 45% உலோகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த facility தற்போது ஒரு நாளைக்கு சுமார் 20 டன் பொருட்களைச் செயலாக்குகிறது. அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 45 டன், அதாவது சுமார் 20 லட்சம் பாட்டில்கள் மற்றும் கேன்கள் வரை கையாளும் திறன் கொண்டதாக உள்ளது.

Return Right இயந்திரங்கள் மூலம் திரும்பப் பெறப்படும் பாட்டில்கள் மற்றும் கேன்கள் முதலில் வண்ணக் குறியீடு செய்யப்பட்ட பைகளில் சேகரிக்கப்படுகின்றன.

பின்னர் அவை Tuas facility-க்கு கொண்டு செல்லப்பட்டு, தானியங்கி இயந்திரங்கள் மற்றும் ரோபோ கரங்களின் உதவியுடன் பிரிக்கப்படுகின்றன.

உலோக கேன்கள் Aluminium மற்றும் Steel என தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பாட்டில்கள் PET, HDPE மற்றும் PP போன்ற வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

பிளாஸ்டிக் பாட்டில்களின் வகையை கண்டறிய optical sensors மற்றும் near-infrared தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் அவை அழுத்தப்பட்டு பெரிய கட்டிகளாக (bales) மாற்றப்பட்டு மறுசுழற்சி நிலையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

சிங்கப்பூரின் Beverage Container Return Scheme ஏப்ரல் 1, 2026 முதல் தொடங்கியது. 150ml முதல் 3,000ml வரையிலான தகுதியான பிளாஸ்டிக் மற்றும் உலோக பானக் கொள்கலன்களுக்கு S$0.10 திருப்பித் தரக்கூடிய வைப்பு தொகை விதிக்கப்படுகிறது.

தற்போது மாற்றக் காலம் நடைமுறையில் உள்ள நிலையில், அக்டோபர் 1 முதல் Deposit Mark இல்லாத பானங்களை விற்பனை செய்ய முடியாது. நாடு முழுவதும் சுமார் 1,300 Return Right reverse vending machines செயல்பாட்டில் உள்ளன; மேலும் 200 இயந்திரங்கள் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BCRS மூலம் திரும்பப் பெறப்படும் பானக் கொள்கலன்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 55 லட்சத்திலிருந்து, செப்டம்பர் 13ஆம் தேதிக்குள் 3.3 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்த புதிய sorting facility மூலம் சேகரிக்கப்படும் பாட்டில்கள் மற்றும் கேன்களை முறையாகப் பிரித்து மறுசுழற்சி செய்வதற்கான நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.