சிங்கப்பூரில் உள்ள கட்டுமான தளத்தில் திடீர் தீ விபத்து..!!! எங்கே..??

சிங்கப்பூரில் உள்ள கட்டுமான தளத்தில் திடீர் தீ விபத்து..!!! எங்கே..??

சிங்கப்பூர்: பைஷங்க் சாலையில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் நேற்று (ஜூன் 15) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படையினருக்கு கிடைத்ததை அடுத்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றோம் தீயை அணைக்க அதிகாரிகள் இரண்டு நீர்ப் பீரங்கிகள் பயன்படுத்தியுள்ளனர்.

இதனை அடுத்து ஜூன் 15ஆம் தேதி இரவு சுமார் 11:30 மணியளவில் 7 பாக் ஷிங் சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததை கூறியுள்ளனர்.

வான்வழி தூக்கியின் இயந்திரப் பகுதிக்குள் தீ விபத்து ஏற்பட்டதாக தீமைப்பு வீரர்கள் கூறியுள்ளனர் ஆம்புலன்ஸ் உதவி தேவைப்படாமலேயே அதிகாரிகள் தீயணைப்பு குழாய்களை பயன்படுத்தி தீயை அணைத்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய மாவட்ட மேயர் பான் லிப்பிங் இன்று (ஜூன் 16) காலை தனது வாராந்திர மக்கள் சந்திப்பு கூட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்ப கையில் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தளத்திற்கு சென்றுள்ளார். மேலும் அவரது பதிவில் குடிமை பாதுகாப்பு படையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர்களுக்கும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட கட்டமான தொழிலாளர்களுக்கு இனமாக பானங்களை வழங்கிய அங்கிருந்த குடியிருப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் பகிர்ந்த புகைப்படங்களில் சம்பவ இடத்தில் குறைந்தபட்சம் ஒரு தீயணைப்பு வாகனமும் ஒரு காவல்துறை வாகனமும் இருந்தது என தெரியவந்துள்ளது. தற்போது இந்த நகரத்தில் உலக நாடுகள் மாநாடு நடைபெற்று வருவதால் நகரின் பாதுகாப்பை தேனி வருகின்ற காவலர்கள் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பிற அன்றாட நாயகர்களுக்கு அவர் மீண்டும் ஒருமுறை தனது நன்றியை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

வான்வழி பணித்தளத்தின் இயந்திர பகுதியில் தீப்பிடித்த வேகமாக எரிந்தது. தீ விபத்திற்கான காரணம் குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK