பாம்பு வடிவில் பிரம்மாண்ட ஆலயம்..!! பக்தர்களை வியக்க வைக்கும் அதிசய கோயில்..!! எங்கு உள்ளது தெரியுமா..??
பாம்பு’ வடிவில் அமைந்த ஆலயம்தெலங்கானா மாநில தலைநகரான ஐதராபாத் அருகே உள்ளது. நம்பள்ளி குட்டா என்ற ஊர்.
இங்கு மெஹபூப்நகரில் இருந்து கர்நூல் செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக, ஒரு சிறிய குன்றின் மீது லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது.இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியில் நாக தேவதைக்கு பாம்பு வடிவத்தில் ஓர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் நுழைவுவாயிலில் போன்று இந்த நாகதேவதை கோயில் அமைந்திருக்கிறது.
பிரமாண்ட வடிவம் கொண்ட பாம்பின் வால் பகுதியில் இருந்து, நாகதேவதை கோயில் ஆரம்பமாகிறது. அதற்கு முன்பாக, தூணைப் பிளந்து கொண்டு நரசிம்மர் வெளிவருவது போன்ற சிற்பம் வடிவமைப்பு வைக்கப்பட்டுள்ளது.
வளைந்து நெளிந்து கிடக்கும் பாம்பு உருவம், சிமென்டால் உருவாக்கப்பட்டுள்ளது. பாம்பின் வயிற்றுப்பகுதியில் இருந்து உள்ளே செல்ல சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அப்படி பாம்பின் வடிவத்துக்குள் நுழைந்ததும், பக்த பிரகலாதனின் முழுமையான வாழ்க்கைச் சரித்திரம், சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கும் அழகைக் காணலாம்.
கொல்வதற்கு எடுத்த முயற்சிகள், இறுதியில் தூணில் இருந்து வெளிப்படும் நரசிம்மர், இரண்யகசிபுவை வதம் செய்வது எல்லாம் சிற்பமாக அழகுற வடித்து வைக்கப்பட்டுள்ளன.
நாகச் சயன சிலையில் காகபுஜண்டநாத முனிவரும் இடத்தில் நரசிம்மர், இரண்டு கரினியை வதம் செய்யும் சிலை அமைந்துள்ளது. நாகதேவதை பின் புறமாகான சிற்பங்களும் ஆங்காங்கே உள்ளன.
பாம்பு வடிவத்துக்குள் நுழையும் பக்தர்களுக்கு சூரிய வெளிச்சம், காற்று கிடைப்பதற்காக, அந்தச் சிலையின் உடல் பகுதியில் ஆங்காங்கே ஜன்னல் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நாகர் வடிவ கோயிலை விட்டு வெளியே வந்ததும், லட்சுமிநரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் பாதை தொடங்குகிறது. இது சில நூறு செங்குத்தான படிகளைக் கொண்டதாக இருக்கிறது.மலையின் மீது சிறிய கோயிலாக லட்சுமிநரசிம்மர் ஆலயம் அமைந்திருக்கிறது. ஆலயத்தின் முன்பாக கொடிமரம் உள்ளது.
அதன் அருகில் இடதுபுறம் சுமார் 20 அடி உயரத்தில் ஒரு சிறிய கல்தூண் நிற்கிறது. அந்த தூணின் உச்சியில் சிறிய தட்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்கள், கீழே நின்றபடி அந்த தூணின் உச்சியை நோக்கி, சில்லறைக் காசுகளைத் தூக்கி வீசுகின்றனர்.
அப்படி வீசும் காசுகள், தூணின் உச்சியில் இருக்கும் தட்டில் விழுந்துவிட்டால், பக்தர்கள் நினைக்கும் காரியங்கள் நல்லமுறையில் நடேறறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
கோயில் கருவறைக்குள், நனது இடதுபக்க மடியில் லட்சுமிதேவியை அமர்த்தியபடி, நரசிம்மசாமி அருள்பாலிக்கிறார்.
நம்பள்ளி பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும், மெஹபூப்நகர் பேருந்து நிலையத்தில இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திலும், கர்நூலில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் நம்பள்ளிகுட்டாவில் இந்த லட்சுமிநரசிம்ம பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது.