மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026: பொதுமக்கள் கட்டாயம் படிக்க வேண்டிய விழிப்புணர்வு பதிவு..!!
இந்தியாவில் கடைசியாக 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) நடத்தப்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட தாமதத்திற்குப் பிறகு, தற்போது புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளன.
இதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, சில மோசடி கும்பல்கள் (Scammers) பொதுமக்களின் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தைத் திருட திட்டமிட்டு வருகின்றனர். இந்த கணக்கெடுப்பின் போது மோசடியாளர்களிடம் ஏமாறாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்த முழு விவரங்களை இந்தக் பதிவில் காண்போம்.
கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகள் என்னென்ன? அரசு அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கு வரும்போது, அவர்கள் 33 கேள்விகளை மட்டுமே கேட்பார்கள். இந்த கேள்விகள் முக்கியமாக 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
பிரிவு 1 (இருப்பிடம் சார்ந்தவை): உங்கள் கட்டிடம், வீட்டின் உரிமை (சொந்த வீடா அல்லது வாடகை வீடா), மற்றும் வீட்டில் எத்தனை அறைகள் உள்ளன போன்ற விவரங்கள்.
ஆன்லைன் மூலம் நீங்களே கணக்கெடுப்பை பூர்த்தி செய்வது எப்படி? மோசடிகளில் இருந்து தப்பிக்க, நீங்களே சுய விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய (Self-Enumeration) அரசு வழிவகை செய்துள்ளது.
>>அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான se.census.gov.in என்ற முகவரிக்குச் செல்லவும்.
>>உங்கள் மொபைல் எண் மற்றும் அடிப்படை விவரங்களை உள்ளிட்டு ஓடிபி (OTP) மூலம் லாகின் செய்யவும்.
>>அங்கு கேட்கப்படும் 33 கேள்விகளுக்கு ஆன்லைனிலேயே பதிலளிக்கலாம். உங்கள் வீட்டின் இருப்பிடத்தையும் (Location) இதனுடன் டேக் (Tag) செய்துகொள்ளலாம்.
>>விவரங்களைச் சரிபார்த்து ‘Final Submit’ கொடுத்தவுடன், உங்களுக்கு 11 இலக்க கணக்கெடுப்பு எண் (Self-Enumeration ID – SEID) கிடைக்கும்.
இனி உங்கள் வீட்டிற்கு அரசு அதிகாரிகள் வரும்போது, இந்த SEID எண்ணை மட்டும் காண்பித்தால் போதுமானது. வேறு எந்த விவரங்களையும் அவர்களிடம் நீங்கள் அளிக்கத் தேவையில்லை.
உண்மையான அரசு அதிகாரிகளை எப்படிக் கண்டறிவது? உங்கள் வீட்டிற்கு வரும் அதிகாரிகள் உண்மையானவர்களா என்பதை அறிய இந்த 3 வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்
அடையாள அட்டை: வீட்டிற்கு வரும் நபரிடம் முதலில் அரசு வழங்கிய அதிகாரப்பூர்வ அடையாள அட்டையைக் (Government Issued ID Card) கேட்டுச் சரிபார்க்கவும்.
டிஜிட்டல் முறை (No Paperworks): தற்போதைய கணக்கெடுப்பு முறைகள் அனைத்தும் மொபைல் செயலிகள் (Apps) மூலமாகவே நடத்தப்படுகின்றன. யாராவது காகித படிவங்களை (Paperworks) எடுத்துக்கொண்டு வந்தால், அவர்கள் உண்மையான அதிகாரிகள் அல்ல.
கட்டணம் இல்லை: இந்தக் கணக்கெடுப்பு முற்றிலும் இலவசமானது. இதற்காக நீங்கள் ஒரு பைசா கூட யாருக்கும் தர வேண்டியதில்லை.
உங்கள் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் நண்பர்களுக்கு இந்தத் தகவலைப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். பாதுகாப்பாக இருங்கள்!