தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக்...!!

2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தொடரிலிருந்து வெளியேறி உள்ளது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தேர்வு செய்தது. இதன் பிறகு, பீல்டிங் செய்த மும்பை அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது.
இந்தப் போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அற்புதமாக விளையாடி, 36 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இந்த சீசனில் ரோஹித் சர்மாவின் மூன்றாவது அரைசதம் இதுவாகும்.
இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது மும்பை இந்தியன்ஸ் அண்ணியிடம் 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இது குறித்து ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் கூறுகையில், “முதலில் மும்பை அணி விளையாடியதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மும்பை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தை இறுதிவரை கொண்டு சென்று, பின்னர் ஒரு ஓவருக்கு தலா 10 ரன்கள் எடுத்தனர்.
கடைசியில் அவர்கள் ரன்களைக் குவிக்கத் தொடங்கினர். எங்கள் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை நான் எதிர்பார்த்தது போல் அமையவில்லை.இந்த மைதானத்தில் 190-200 ரன்கள் எடுப்பது என்பது எளிதான விசயமாகும்.
ஆனால் இறுதி கட்டத்தில் ஹர்திக் பாண்டியாவும் சூர்யகுமாரும் அற்புதமாக விளையாடினர். நாங்கள் சில விஷயங்களை மாற்ற வேண்டியிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. ஆரம்பத்தில் நாங்கள் நன்றாக விளையாடினோம், ஆனால் மிடில் ஆர்டரில் நாங்கள் தடுமாறிவிட்டோம்.
நானும் துருவாவும் நிலையான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் பவர்பிளேயில் நிறைய விக்கெட்டுகளை இழந்தோம். பல விஷயங்களில் நாங்கள் தவறு செய்தோம்.
சில விஷயங்கள் மோசமாக முடிந்தன. எனவே தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அணியை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க முடிவு செய்துள்ளோம். நாங்கள் இது போன்ற சிறிய தவறுகளை அதிகமாகச் செய்யாமல் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.இந்த சீசனில் பல போட்டிகளில் நாங்கள் நெருங்கி வந்து தோல்வியடைந்துள்ளோம். அடுத்த மூன்று போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம் என்று ரியான் பராக் கூறினார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan