“ஜூ சியட் ஈஸ்ட் கோஸ்ட்டுடன் இணைக்கப்படும்”- அமைச்சர் தோங்

"ஜூ சியட் ஈஸ்ட் கோஸ்ட்டுடன் இணைக்கப்படும்"- அமைச்சர் தோங்

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் எட்வின் டோங்,ஜூ சியாட்டை ஈஸ்ட் கோஸ்ட்  தொகுதியுடன் ஒருங்கிணைப்பது தனது முன்னுரிமைகளில் ஒன்று என்று கூறியுள்ளார்.

உள்கட்டமைப்பு, சமூகத் திட்டங்கள் இரண்டிலும்
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கான தேவை என்ன என்பதில் கவனம் செலுத்தவிருப்பதாய் திரு தோங் சொன்னார்.

மேலும் மூத்தோர் பராமரிப்பு, பராமரிப்பாளர்களுக்கான திட்டம், இளையர்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் போன்றவற்றில் உடனடி கவனம் செலுத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் எல்லை மாற்றங்களைத் தொடர்ந்து, ஜூ சியெட் ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் சேர்க்கப்பட்டது.

ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் மக்கள் செயல் கட்சி (PAP) மற்றும் தொழிலாளர் கட்சி போட்டியிட்டன.

மக்கள் செயல் கட்சி 58.76 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.