போஸ்னியாவில் வீரமங்கையாக திகழும் 15 வயது இளம்பெண்..!!! 15/05/2025 / Bosnia, sgtamilan, worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link போஸ்னியாவில் வீரமங்கையாக திகழும் 15 வயது இளம்பெண்..!!! போஸ்னியாவில் பாரம்பரியக் காளைச் சண்டை மிகவும் பிரபலமானது.அங்கு 200 ஆண்டுகளுக்கும் மேலாக இது நடைமுறையில் உள்ளது.காளைகளுக்கு பொதுவாக ஆண்களே பயிற்சி அளிப்பார்கள்.இப்போது பெண்களும் இதைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.அந்த வரிசையில் தனித்துவமாக திகழ்கிறார் 15 வயது இளம் பெண்ணான மிர்னேசா ஜூனுசோவிச்.பள்ளியில் படிக்கும் நேரத்தை தவிர்த்து காளைக்குப் பயிற்சி அளிப்பதில் அவள் தனது நேரத்தைச் செலவிடுகிறாள்.மிர்னேசாவின் காளையின் பெயர் ‘கோப்ரா’. புக்கிட் தீமா பகுதியில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்...!!! அவர் கிட்டத்தட்ட 12 வயதிலிருந்தே காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.ஒவ்வொரு நாளும் 3 மணிநேரம் அல்லது அதற்கு மேல் காளையுடன் நடப்பதாக மிர்னேசா கூறுகிறார்.காடு முகடுகள் போன்ற பல இடங்களில் நடக்கும்போது,பாதையில் கிடக்கும் கிளைகள் மற்றும் புதர்களை தனது கொம்பைப் பயன்படுத்தி அகற்றி தமக்கு உதவுவதாக கூறினார்.‘கோப்ரா’வுடனான தனது உறவு தனித்துவமானது என்று கூறும் மிர்னேசாவின் அசாத்திய திறமையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan