புவாங்கோக் பகுதியில் சாலை விபத்து…!! கார் ஓட்டுநரை கைது செய்த காவல்துறை…!!

புவாங்கோக் பகுதியில் சாலை விபத்து...!! கார் ஓட்டுநரை கைது செய்த காவல்துறை...!!

புவாங்கோக் பகுதியில் ஜூன் 4-ம் தேதி ஒரு வேனும் காரும் சம்பந்தப்பட்ட காலை விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநரை காவல்துறை கைது செய்துள்ளது.

நேற்று முன்தினம் (ஜூன் 4) இந்த விபத்தானது புவாங்கோ கிரீன் புவாங்கோக் லிங் சந்திப்பில் நிகழ்ந்துள்ளது.

மேலும் விபத்தில் வேன் ஓட்டுநர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விபத்து குறித்த தகவல் ஆனது காவல்துறைக்கும், சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கும்(SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் இந்த விபத்தில் ஒரு கார் மற்றும் வேன் விபத்துக்குள்ளாகி உள்ளது என்பது தெரிய வந்தது.

விபத்தில் காயம் அடைந்தவேன் ஓட்டுநரை சிகிச்சைக்காக செங்காங் பொது மருத்துவமனைக்கு SCDF அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டி மற்றொருவருக்கு காயம் ஏற்பட காரணமாக இருந்தால் கார் ஓட்டுநர்களை கைது செய்துள்ளதாக காவல்துறை என தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கிய மற்றொருவர் லேசான காயங்கள் ஏற்பட்ட காரணத்தால் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார் என்பதையும் காவல்துறை கூறியுள்ளது.

இது குறித்த காணொளி ஆனது பேஸ்புக் பக்கங்களில் பரவி வருகிறது.அந்த காணொளியில் ஆரஞ்சு நிற வேன் மற்றும் கருப்பு காரும் விபத்துக்குள்ளாவது தெளிவாக தெரிகிறது.

சம்பவத்தில் வேன் சாய்ந்து தரையில் மோதியது மற்றும் காரின் முன் பகுதி சேதத்துக்கு உள்ளானதும் தெரிகிறது. காவல்துறை இந்த விபத்து குறித்த விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK